பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 9t வருவது தீ அவர் பக்தரான நீர் பாடினால் வருவதும் தீயே! உம் வாயிலிருந்து வேறென்ன வரும் நீர், பெரிய வரகவி என்ற எண்ணமோ? அப்படியென்றால், பாடுவதற்குரிய பொருள் ஒன்றைத் தருகிறேன். அதை வைத்துப் பாடுவீரா? ஈ ஏற மலை குலுங்கியதாகப் பாடும் - என்றார்.அந்த வைணவ வேதியர்: ஈ ஏற மலை குலுங்குமோ? அது எப்படி? என்று எண்ணிக் கொண்டே காளமேகத்தைப் பார்த்தது பக்தர் கூட்டம். காளமேகக் கவிஞர், கம்பீரமாக உடனே பாடினார். அப்பாடல் இது; 'வாரணங்கள் எட்டும் மகமேரு வுங்கடலும், தாரணியும் எல்லாம்சலித்தனவால்-நாராணனைப் பண்வாயிடைச்சி பருமத்தி னால் அடித்த, புண்வாயில் ஈமொய்த்த போது.” பாடலைக் கேட்டவர்கள் கைதட்டினார்கள் கூட்டமே வியப்பால் ஆரவாரம் செய்தது! பாடலுக்குரிய பொருள் என்ன தெரியுமா? மண்ணை உண்ட கண்ணன், யசோதைக்கு வாய் திறந்து காட்டுகிறான். அங்கே மண் தெரியவில்லை. ஈரேழு பதினான்கு உலகமும் வாயில் தெரிந்தது. உலகமே தெரிந்தது. கடல்கள் தெரிந்தன எண் திசைகளையும் காத்து நின்ற திக்கு யானைகள் தெரிந்தன. மேரு மலை தெரிந்தது. விந்தியமலை, பொதியமலை இன்னும் எத்தனையோ மலைகள் தெரிந்தன. அதிர்ந்து போய் இவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள் யசோதை இந்த நேரத்தில் சந்தர்ப்பம் தெரியாமல் ஓர் ஈ வந்து குறுக்கிடுகிறது. கண்ணன் வாயிலே உள்ள ஒரு புண்ணிலே போய் உட்கார்ந்தது. எப்படி ஏற்பட்டது அந்தப்புண்? கண்ணன் வெண்ணையைத் திருடித் தின்னும் போது இடைச்சியர்பெரிய மத்தைக் கொண்டு அடித்ததால் ஏற்பட்ட புண் அது. அதிலே போய் உட்கார்ந்தது அந்த ஈ. குழந்தை கண்ணன் இருகைகளையும் நிலத்தில் ஊன்றி, வாயை அங்காந்து அன்னை யசோதாவிற்கு அந்த அற்புதக் காட்சியைக் காட்டிக் கொண்டிருந்த போது, அந்த ஈ சென்று புண் மேலே அமர்ந்து நெருடியது. ஈயை ஒட்ட, தலையை மேலும் கீழுமாகவும், பக்க வாட்டாகவும் அசைக்கிறான் கண்ணன். குழந்தையின் வாயிலே உள்ள உலகங்கள் எல்லாம் ஆடுகின்றன. கடல்கள் கொந்தளிக்கின்றன. மலைகள் குலுங்குகின்றன. இவை யெலாம் எதனால் ஏற்பட்டன?