பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தேசியத் தலைவர் காமராஜர் ஓர் ஈயினால். ஈ ஒன்று கண்ணனது வாயில் ஊர, ஊர, மலைகளும் கடல்களும் உலகங்களும் குலுங்கிக் குலுங்கி ஆடுகின்றன! ஆசுகவி காளமேகம் ஈ ஏற மலை குலுங்க என்று பாடிய பாடலின் குழந்தை கண்ணன் காட்சியைப் போல, காமராஜ் என்ற விடுதலைப் போராட்ட வீரர், பாரதியார் பாடலை மதுரையிலே கூடியிருந்த பொதுமக்கள் முன்பு பாடி ஆடிக் கொதித்து, குமுறி வீராவேசமாகக் காட்சியளித்தார். அப்போது அவருடைய இடுப்பைச் சுற்றிக் கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருந்த வாட்கள் பளபளத்தன; ஒன்றோடொன்று அவர் ஆடியபோது மோதிக் கொண்டன; கண கனவென்ற ஓசையோடு ஒலித்தன. வாட்களும் அவரோடு ஆடின. பாடின, எகிறிக் குதித்தன, எம்பின, குலுங்கின, உலுங்கி உராய்ந்தன. பாண்டிய மன்னனது தளபதி ஒருவன் போர் முழக்க மிடும்போது, புறப்பாட்டுப் பறை ஒலிப்பது போல; அந்த வாட்கள் காமராஜர் உணர்ச்சிக்கு மீறி ஒசையிட்டு ஒலித்த காட்சியைக் கூடியுள்ள மக்கள் கண்டு வீராவேசம் பெற்றார்கள். வாலிபர் காமராஜ் இடுப்பிலே கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருந்த வாட்கள், அவர் உயரே எழும்பி, எகிறி எகிறி கைகளைத்துக்கித்துக்கி குதித்து குதித்து குதித்து உடலை உலுக்கி உலுக்கிப் பாடியபோது, காமராஜ் இடுப்பிலே கட்டியிருந்த வாட்கள் ஒன்றோடொன்று மோதி, ஓசையை எழுப்பியபடியே ஊர்வலம் வந்தன! பொதுமக்கள் இந்தக்காட்சியைக்கண்டுகளித்துப் பாடியபடியே அவரைப் பின் தொடர்ந்து வந்தார்கள் சென்னை மாகாண சட்ட அமைச்சராக அப்போதிருந்த சர்.சி.பி. இராமசாமி ஐயர், மலபார் தவிர, மற்ற இடங்களிலே எல்லாம் முன் உத்தரவு ஏதும் பெறாமலே வாளேந்திச் செல்லலாம் என்று அறிவித்தார்: வாளேச்சலில் காந்தீயம்! அவ்வாறு ஐயர் அறிவித்ததால், வாள் போராட்டத்தையும், ஊர்வலத்தையும் காமராஜரால் தொடர்ந்து நடைபெறாதவாறு தடுத்துவிட்டார். பெரியபுராணத்தில் சேக் கிழார் பெருமான் அவர்களால் பாடப்பட்ட ஏனாதிநாயனார், வஞ்சனையால் செருக்கேறிய தனது எதிரியைக் கொன்றிடக் கருதி வாளை ஒச்ச ஓங்கினார்.