பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 93 ஆனால், தளபதி காமராஜ் அவர்கள், காந்தியடிகளின் அகிம்சைக் கொள்கையை நெஞ்சிலே ஏந்தியவராதலால், வெள்ளையனான எதிரி மீது வாளோச்சாமல், தமிழ் இனத்தின் வீரப் பண்பை, அன்றைய தமிழர் அடிமை நிலைமை ஏளனம் புரிகின்ற பாடலை வீரமாகப் பாடிப்பாடி, தனது உணர்ச்சிக்குரிய திருப்புமுனையைத் திசைதிருப்பி விட்டார் அமைதி பெற்றார்! அந்த ஏனாதி நாயனார் பள்ளியிலே சேர்ந்த காமராஜ், தமிழில் எழுதப் படிக்க மட்டுமே கல்விகற்கும் நிலை பெற்றார்: சத்திரிய வித்தியா சாலா! அதன்பின் சத்திரிய வித்யாசாலா என்ற உயர்நிலைப் பள்ளியில் ஏழாவது வகுப்பு வரைப்படித்தார். அந்த நேரத்திலிருந்து ஆங்கிலக் கல்வி பயிலும் தகுதிக்கேற்ப ஆங்கிலமும் கற்றார்! அந்த வித்தியாசாலாப் பள்ளி அருகே உள்ளது, பிடி அரிசிப் பள்ளிக்கூடம் என்ற ஒரு பள்ளி. இவ்வாறு இது பெயர் பெற்ற காரணமே விசித்திரமானது! விருதுநகரில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும், நாள் தோறும் ஒவ்வொரு பிடி அரிசியை அந்த பள்ளிக்கு இலவசமாக வழங்கியதால், அந்தப் பள்ளி அப்பெயரைப் பெற்றுள்ளது. இந்தப் பள்ளியில், 1888ஆம் ஆண்டு முதல், வெள்ளையராட்சி இலவசக் கல்வியை வழங்கி இருக்கிறது. அத்துடன் மகிமை மூலமாகப் பண வசூல் செய்தும் அப்பளியை நடத்தினார்கள் விருதுநகர் மக்கள்! மகிமை என்பது அவ்வூர் வணிகர் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட தொகையை ஒரு சங்கத்தில் சேர்ப்பது. அப்பணம் பின்னர்தருமமாகத்தக்கவருக்கு வழங்கப்படும். இன்றும் இந்த மகிமை வசூல் நெல்லை மாவட்டத்தினரிடம் உள்ளது. மதிய உணவுக்கு முன்னோடிப் பள்ளி! காமராஜ் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சரானதும், தமிழகம் முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளிகளில் இலவச கல்வித் திட்டத்தையும், இலவச உணவுத் திட்டத்தையும் கொண்டு வந்திட, அவர் படித்த சத்திரிய வித்தியாசாலா பள்ளிதான் முன்னோடி, உதாரணமாக அமைந்தது! பிடியரிசிப் பள்ளிக்கூடத்திலே அவர் கல்வி பெற்றிடச் சேர்ந்த முதலாண்டிலே ஒரு நாள், காமராஜ் அவர்களின் தந்தையார் குமாரசாமியார் தலைவலியாலே துடித்தார்! மறுநாள் அவர் மறைந்து விட்டார்!