பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 தேசியத் தலைவர் காமராஜர் அவர்காலமானது, காமராஜின் தாயார் சிவகாமி அம்மையாரை வேதனைக் கடலிலே தள்ளியது. தந்தையை இழந்த காமராஜருக்கு குடும்ப பாரத்தை எண்ணி என்ன செய்வதென்ற திகைப்பு நிலையை ஏற்படுத்தியது. இருதலைக் கொள்ளி எறும் பு போலானார்: இளம் வயதல்லவா? வேலைக்கு போவதா, படிப்பதா? இந்தச் சோகம் சூழ்ந்த நிலையில், அவரது தாய் மாமன் திரு. கருப்பையா நாடார் ஆறுதலும் தேறுதலும் கூறி, அக் குடும்பத்திற்குத்தன்னாலான உதவிகளைச்செய்து வந்தார். தந்தை காலமான பின்பு, சிறுவர் காமராஜ், இளமையில் வறுமையால் உருவானபல சோதனைகளுக்கும்-நெருக்கடிகளுக்கும் ஆட்பட்டார். அவற்றை எல்லாம் தனது மனோ தைரியத்தால், எதிர் நீச்சல் போட்டே எதிர்த்துச்சமாளித்துப் பழகிய நிலை, அவருக்குச் சிறு வயது முதலே ஏற்பட்டு விட்டது. அந்த மன உறுதிதான். அவருக்கு எதிர்கால அரசியலில் ஏற்பட்ட பல சோதனைகளைப் பொறுப் போடு - ஏற்று, அனுபவித்து வெற்றிகளைப் பெறும் பயிற்சியைத் தந்ததது. வடநாட்டிலே உள்ள நாகபுரி என்ற நகரில், ஆங்கிலேயர்கள் வசிக்கின்ற பகுதியின் வீதிகளில், காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மூவண்ணக் கொடிகளை ஏந்திச் செல்லக் கூடாது என்று அங்கே இருந்த காவல் துறையினர் ஒரு சமயம் தடை விதித்திருந்தார்கள்! அதை எதிர்த்துப் போராட இந்தியாவெங்குமுள்ள காங்கிரஸ் காரர்கள் நாகபுரி நகருக்குச் சென்றார்கள்! வெள்ளையர்கள் விதித்திருந்த தேசிய கொடித் தடையை அவர்கள் உடைத் தெறியப் பெரும் போராட்டம் புரிந்து நூற்றுக்கணக்கானவர்கள் கைதானார்கள் இப்போராட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் இருந்து காங்கிரஸ் வீரர்கள் அணி அணியாகப் புறப்பட்டார்கள் மாவீரர்காமராஜ், விருதுபட்டியிலே இருந்து போராட்ட வீரர்களை அனுப்பிக் கொண்டே இருந்தார்: இறுதியாக, அவர் புறப்பட்டபோது, நாகபுரி காங்கிரஸ்காரர் களுக்கும் வெள்ளையர்காவல்துறைக்குமிடையே ஓர் உடன்பாடு உருவாகியதால் அந்தப் போராட்டம் நின்றது! அதனால், காமராஜ் அவர்களும் நாகபுரிக்குச் செல்லவில்லை. ÄÄ„ و میانیهای این ان بی ای هشح iశ : డ్గశి : & క్లే శక్తే f ఫైళ్ల శ్లే