பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 . தேசியத் தலைவர் காமராஜர் அவரது அறிவுக்கு என்ன தோன்றியதோ என்னவோ, வேழத்தின் காலில் அப்போது சங்கிலி இல்லாதிருப்பதைக் கண்டார்: கரியைக் கட்டும் இடமான இரும்பு கெளனிக்கு ஓடினார். அங்கே அறுந்து கிடந்திருந்த சங்கிலியை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். அந்த யானை முன்னாலேதுார நின்றே அதைத் துக்கியெறிந்தார். தன்னைக் கட்டும் சங்கிலியென யானையின் கண்களுக்கு தென்பட்டதும், களபம் அமைதி கண்டது! கட்டும் இடத்திற்கே அந்தக் களிற்றைக் காமராஜ் அழைத்துச் சென்ற காட்சியைக் கண்ட மக்கள் களி கொண்டார்கள்! எவ்வாறு ஏற்பட்டது, சிறுவர் காமராஜுக்கு இந்தப் பழக்கம்? அதிர்ச்சி தரும் இந்தச் சிந்தனை அவருக்குத் தோன்றியது எப்படி? இதுதான் அறிவு நுட்பம்! அதன் பாகன் மாரியப்ப தேவன் நட்பால், அவர் பள்ளிக்குச் செல்லும் போதெல்லாம் வாழைப்பழம், உடைந்த தேங்காய் மூடிகள் ஆகியவற்றை அந்த யானை தின்னக் கொடுப்பார்! அந்தப் பழக்கம் வழக்கமானதால், யானையும் அவரை அடையாளம் கண்டு கொள்ளமுடிந்தது அதனால், யாரும் நெருங்க முடியாத அந்த கைமாவை, அவரால் அமைதியாக நெருங்கி அதனருகே சென்று வழி நடத்திச் செல்ல முடிந்தது. வீதியே அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டிருந்த போது, காமராஜுக்கு இந்தச் சிந்தனைக் கூர்மை அப்போது தோன்றியதால் தான், உடனே ஒடிச்சென்று, மாதங்கத்தின் சங்கிலியைக் கொண்டு வந்து அதன் முன்னாலே நின்று தூக்கி எறியும் துணிவும் அவருக்கு வந்தது! செந்தமிழ்ப் பூவிலே பைந்தமிழ்ப்பா தேனெடுத்து, இந்தியச் சுதந்திரத்திற்காக உணர்ச்சிச் சுவைக் கவிதைகளைப் பாடி, மக்கள் நெஞ்சிலே தேசபக்த இனிமையை ஊட்டிய விடுதலைக் கவிஞர் பாரதியாரும், ஒரு நாள் திருவல்லிக்கேணி பகுதியிலே உள்ள பார்த்தசாரதிப் பெருமான் கோயிலுக்குச் சென்றார். திரும்பி வரும்போது, அந்த சிந்துக்குத் தந்தையான பாரதி, தனக்கே உரிய கருணை உணர்வால், அக்கோயில் யானைக்கு உடைந்த தேங்காய் மூடிகளையும் - வாழைப்பழத்தையும் கொண்டு வந்து அதன் கையிலே வைத்து ஊட்டினார்: