பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 97 அழகாகப் போடப்பட்ட ஆழ்வார் திருநாம வேழத்திற்கு அப்போது வெறியேறி, அருகே இருந்த பாரதியை இழுத்துத் தாக்கிக் கீழே தள்ளியது! அந்த அதிர்ச்சியிலே சென்று படுத்தார் பாரதி அவ்வளவுதான், உடன்தொடர்ந்து வயிற்றுக்கடுப்பு நோய்! அமரரானார் சில நாட்களில் - அவர். இருபதாம் நூற்றாண்டின் தேசபக்திக்குத் தனது பாக்கள் வாயிலாக இலக்கணம் வகுத்த இளைய மகன் அவர் விடுதலை பெறாத இந்திய நாட்டிற்கு வாழ்த்துப் பா பாடிய வாழையடி வாழை வந்த வண்டமிழ்க் கவி வித்தகன் நான் ஒரு நூற்றாண்டு உயிரோடு இருப்பேன்! பாரத மாதா விடுதலை பெறுவதைப் பார்ப்பேன். என்னைக் கூற்றுவன் கண்டால் குதித்து ஒடுவான். நான் ஒரு கலியுகச் சித்தன்' என்றெல்லாம் தன் வாழ்நாளைப் பற்றிப் பேசியவர் பாரதியார்: ஒரு பொழுதும் வாழ்வது அறியார் கருதுப கோடியும் அல்ல பல (குறள்: 337) என்ற குறளுக்கேற்ப, தமது உயிரும் உடம்பும் சேர்ந்து வாழ்வதனை ஒரு பொழுதளவும் உணராதவராக அறியாதவரானார், - பாவம்' வெங்களமதில், வெஞ்சமர் புரியும் வீரனின் வாட்களைப் பெற்ற மீசைமகன், சுதந்திரச்செங்களமாடி வரும் நாட்டுப் பற்றுத் தொண்டர்களுக்குப் போர்ப் பாட்டு பரணி பாடி வந்த வீரத் திருமகன் பாரதி! அதே தேசபக்தியை நெஞ்சிலே தேக்கிய குருளையான காமராஜ் கண்ட களிறுக்கும் மதம் தான்! தணியாத சுதந்திரத் தாகம் கொண்ட தண்டமிழ்க் கவிஞன் பாரதி கண்ட வேழத்திற்கும் மதம் தான்! எழுச்சி பெற்ற ஏறெனத் தோற்றம் கொண்ட இளைய ஏறு காமராஜுக்கு அந்தக் கரி பழக்கமானது தான்! பா மன்னன் பாரதி கண்ட கஜமும் அவருக்குப் பழக்கமானது தான்! இருவருமே தேங்காய் பழங்களை அவற்றுக்கு ஈந்து உண்ண அளிப்பதும் வழக்கமான செயல்தான் இருப்பினும் என் செய்ய! விடுதலைக்கு விவேக உணர்வை விளைவித்த பாரதக் கவிஞன் பாரதிக்கு அப்போது வயது 391 ஆனால், விடுதலை உணர்வுப் பயிரை நெஞ்சிலே ஏந்திய காமராஜ் என்ற தியாகத்தின் வயது பத்து இருந்தும், கரிகளிலே ஒன்று கவிஞருக்குக்கல்லறையைக் கட்டிடக் காரணமாகி விட்டது!