பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 தேசியத் தலைவர் காமராஜர் காமராஜைக் கண்ட களிறு, அவரைப் பார்த்ததும் பசுவாக மாறிவிட்டது கவியைப் பார்தக் கரி, அவருக்குக் காலனேறும் கடாவாகி, பாரதம் விடுதலை பெற்ற பரவசத்தைக் கூடப் பார்க்க முடியாதவாறு சாவுக்குப் பாதை அமைத்து விட்டது! காமராஜ் என்ற காளை வயது அரசியலிலே காலடி வைத்து, உழைப்பால் உயர்ந்து, நாடு சுதந்திரம் பெற்றிட, அணில் இராமபிரானுக்குப் பாலம் அமைத்திட உதவி புரிந்ததாகக் கூறுவார்களே, அதைப் போலப் போராடி, சிறை மீண்டும், சுதந்திரக் காற்றைச் சுவாசித்து, முதலமைச்சராகத் தமிழகத்திற்கு மும்முறைப் பதவியேற்று, பாரதத் திருநாட்டிற்கே பெருந்தலைவ ராகிக் காந்தியடிகளின் கடைசி வாரிசாகக் காலம் ஆனார்! இந்த இருபெரு மேதைகளின் வாழ்க்கையிலே விளையாடிய சம்பவங்களுக்கு என்னதென்று பெயரிடுவதோ! மறைமலையடிகளும் காமராஜூம்! காமராஜ் கற்ற கல்வி, ஆறாவது வகுப் போடு கரை தட்டிய கப்பலானது! அதனால், குடும்பக் காப்பு காரணமாக, வணிகத் துறையிலே வலிய ஈடுபடுத்தப்பட்டார்! ஆனால், அந்த குமாஸ்தா வேலையோ, கல்லாப் பெட்டியிலே பணத்தைப் பூட்டி வைக்கும் கடை முதலாளியாகும் எண்ணமோ, அவர் மனதை ஈர்க்கவில்லை! விருது நகரிலே உள்ள ஞானம் பிள்ளை பொடிக் கடையிலே, நாள் தோறும் அவர் நண்பர்களுடன் கூடுவார்! நாளேடுகளை வரி விடாமல் படிப்பார் அரசியல் எழுச்சிகளிலே ஊடுருவி வாதாடுவார் பிற நண்பர்களையும் சிந்திக்க வைப் பார்| இதற்கெல்லாம் சிந்தனைக் கூடம்தாம் ஞானம் பிள்ளை பொடிக் கடை! தமிழ்க்கடல் மறைமலையடிகளார் தனித்தமிழ்த் தந்தை என்று எதிர்காலத் தமிழறிஞர்களாலும், தமிழக வரலாற்றாலும் பாராட்டப்பட்டவர்! அவர், வேதாச்சலம் என்ற பெற்றோரிட்டப் பெயரோடு கால்சட்டை அணிந்த பள்ளிப்பருவத்தில் நாகப் பட்டினத்திலே உள்ள வெ. நாராயணசாமி புத்தகக் கடைக்குச் செல்வார்! அந்த நாராயணசாமி, கள்ளர் வகுப்பார் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை என்ற மாமேதையின் மாணவர்களிலே ஒருவர்!