பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 99 புத்தகக் கடையும் அங்கே பத்திரிகைகள்விற்பனையும் சேர்த்தே வியாபாரம் புரிந்து வந்தார் - விருதுநகர் ஞானம் பிள்ளை பொடிக் கடையைப் போல! மகாவித்வான் மாணவர்கள்? தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயர், குடந்தைக் கல்லூரித் தமிழ்துறைத் தலைவர் தியாகராச செட்டியார், மாயூரம் முன்சிப் வேதநாயகம் பிள்ளை, புதுவை சவராயலு நாயகர், நாகை வெ. நாராயணசாமி, கோபால கிருஷ்ண பாரதியார் போன்றத் தமிழ் மேதைகள் எல்லாம், மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் மாணவர்களாகி மாண்புப் பெற்றவர்கள்! அத்தகைய தமிழ் மேதையின் மாணவரான நாகை. வெ. நாராயணசாமியின் புத்தகக் கடைதான், மறைமலையடி களாருக்கு இளமைக் காலத் தமிழறிவுக்குரிய சந்திப்பு நிலையாக அமைந்தது! அங்கு வந்து தமிழ் கற்ற நண்பர்கள் குழுவினருடன், வேதாசலம் என்ற பள்ளி மாணவரும், தாம் கற்றக் கல்வியை அளவளாவி வாதப் பிரதிவாதங்களை எழுப்பித் தெளிவு காண்பார். அதனைப் போல, விருதுநகர் ஞானம் பிள்ளை பொடிக் கடையில்தான், காமராஜும் தனது நண்பர் கே.எஸ். முத்துசாமி போன்றவர்களுடன் மாலை வேளையிலே கூடுவார்; அரசியலைப் பேசுவார். நண்பர்களுக்குள் அரசியல் உணர்வுகளை ஊடுருவ வைப் பார்; நாட்டின் அடிமைத்தனத்தை அகற்றிட அணி திரட்டுவார். நாளேடுகளை நாள்தோறும் படிப்பார்; நாட்டு நடப்புகளை அவர்களோடு மான ரோஷமுடன் கலந்துரையாடுவார்! தினசரி இதே சம்பவங்கள் ஞானம் பிள்ளை பொடிக்கடையிலே நடக்கும். அதனால், காமராஜருக்கு நண்பர்கள் மேன்மேலும் வளர்ந்தனர். எதிர்காலத்திலே ஏற்றம் பெறப்போகும் சில மேதைகளுக்குப் பொடிக்கடை, புத்தக்கடை போன்ற இடங்கள் போதிமரங்களாகத் திகழ்ந்தன என்பதற்கு எடுத்துக் காட்டுகளாக இந்த இரு இடங்களும் அமைந்து புகழ் பெற்றன: அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி மாநாடுகள், இந்தியாவின் முக்கிய நகரங்களிலே நடைபெற்று, ஆங்கில ஆதிக்கத்தின் ஆணிவேரை அறுத்தெறிய, அதன் தலைவர்களும் தொண்டர்களும் தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டு வந்த காலம் அது!