பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ịOO தேசியத் தலைவர் காமராஜர் காங்கிரசில் தீவிர மிதவாத அணிகள்: அப்போது தான், சுயராஜ்ஜியம் நமது பிறப்புரிமை, அதைப் பெற்றே தீருவோம்! இந்த உரிமையைப் பெற்றிட, நாம் அன்னியர் தயவையோ, சட்டத்தையோ எதிர் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்று தீவிரவாதிகள், காங்கிரஸில் முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள்! 'இந்திய நாடு விடுதலை பெற வேண்டுமானால், நாம் சட்டத்திற்குட்பட்டே போராட வேண்டும் என்ற நோக்கம் கொண்ட மிதவாத மேகங்களும் காங்கிரஸ் கட்சியை அங்கங்கு சூழ்ந்திருந்தன! தீவிரவாத இடி முழக்கங்களை எழுப்பிய அணிக்குத் திரு பால கங்காதர திலகர் தலைவர்; மிதவாத மேகக்குவியல்களுக்கு திரு கோபால கிருஷ்ண கோகலே தலைவர். தமிழகத்தின் தேசிய அரசியலிலே தீவிரவாத அணியின் இடி முழக்கங்கள் தான் எல்லாப் பகுதிகளிலும் கரடு முரடாக எதிரொலித்துக் கொண்டிருந்தன! செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை, தமிழ்த் தென்றல் திரு.வி. கலியான சுந்தர முதலியார், விடுதலைக் கவிஞர் சி. சுப் பிரமணிய பாரதியார், தியாகி சுப்பிரமணிய சிவா, வ.வெ.சு. ஐயர், சேலம் சி. விசயராகவா சாரியார், எஸ். சத்தியமூர்த்தி ஐயர், டாக்டர் பி. வரதராஜலு நாயுடு, போன்ற அரும் பெரும் தேசபக்தர்கள் எல்லாம், திலகர் அணியைச் சேர்ந்த இடிமுழக்கப் பேரொலிகளை எழுப்பிய தீவிரவாதிகளாவர். மிதவாத அணியிலே எஸ். சீனிவாசஐயங்காரைப் போன்ற சிலர் பெயரளவிற்கான மேக மூட்டம் போலக் காணப்பட்டாலும், சில நேரங்களிலே அவர் கூட திரு. வி.க. வுடன் சேர்ந்து தீவிரவாத தேசபக்தராகவே செயல்படுபவராக இருந்தார். விருதுபட்டி என்ற விருதுநகரிலே, தீவிரவாத அணியைச் சேர்ந்த திரு.வி. கலியாணசுந்தரனார், டாக்டர்.பி. வராராஜலு நாயுடு, ஜார்ஜ் ஜோசப் ஆகியோர் பொதுக்கூட்டம் போட்டுப்பேசினர்! திலகர் திட்டங்களைப்பற்றித் தீவிரமாகப் பேசப்பட்ட அந்தக் கூட்டத்தில், காமராஜும், அவரது பொடிக்கடை அரசியல் நண்பர்களும் கலந்து கொண்டு, பேசும் கருத்துக்களைக் கேட்டுக் கிளர்ச்சி கொண்டிருந்தார்கள்.