பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 4Q? காமராஜுக்கும் தீவிரவாதிகளின் அப்போதைய பேச்சுக்கள் மாபெரும் தேசிய எழுச்சியை உருவாக்கிற்று ஞானம் பொடிக் கடையில் கூடும் நண்பர்களையும் அணியாகத் திரட்டிக் கொண்டுவந்து, ஜார்ஜ் ஜோசப் பேச்சுக்களை, உணர்வுபூர்வமாக உரையாடியபடியே விமரிசனம் புரிந்தார்கள்: அப்போது, முதல் உலகப்போர் நடந்து முடிந்த நேரம்! யுத்தத்தின் போக்குப் பற்றிய விவரங்கள் அனைத்தையும் பத்திரிகைகள் வாயிலாக காமராஜ் அறிந்திருந்தார். ரெளலட் சட்டமும் காமராஜூம்! இந்திய தேசிய மக்களுக்கு, காந்தியடிகள் அந்த நேரத்தில் விடுத்திருந்த போராட்ட அழைப்பை, வாலிபர் காமராஜ் ஊன்றிப் படித்தார். ஆங்கிலேயரின் ரெளலட்சட்டத்தை எதிர்த்து, 1919-ஆம் ஆண்டு, ஏப்ரல் 6-ஆம் நாள், சத்தியாக்கிரகம் செய்ய வேண்டும் என்று காந்தியடிகள் நாட்டு மக்களை அழைத்த அழைப்புதான் அது. அண்ணல் மகாத்மா அப்போது கடுமையான நோயுற்றிருந்தார்; ரெளலட் சட்டத்திற்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று, அவர் பிரிட்டிஷ் வைஸ்யராயைக் கெஞ்சிக் கேட்டார்: மற்ற மனுக்களைப் போலவே காந்தியடிகள் மனுவும் வைஸ்யராயால்துக்கி எறியப்பட்டது. அதனால்தான், அன்றுவரை எந்தவிதக் கிளர்ச்சிகளிலும் தலையிடாமல் இருந்த காந்திபெருமான், உடனே தனது முடிவை மாற்றிக் கொண்டார். அகிம்சைப் போரிலே ஈடுபட நாட்டு மக்களை அழைத்தார். இந்த விவரங்களை எல்லாம் காமராஜ் தெளிவாக உணர்ந்தார். தேசியத் துடிப்புப் பெற்ற அவர் வீறிட்ட வேங்கை போலானார்: அந்தக்காலகட்டத்தில்தான், நெல்லைச்சீமையிலே, துரத்துக்குடி துறைமுகத் துறையிலே வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள், ஆங்கிலேயருடைய ஆதிக்கத் துண்களிலே ஒன்றாக விளங்கிய நீர்ப்பெரும் வழி வணிகத்தை எதிர்த்துக் கப்பலோட்டிய வீரதீர ஆற்றலைக் கண்டு காமராஜர் வியந்து மிதந்தார்: பாரத விடுதலைப் போரிலே அவர் கப்பலோட்டிய வரலாற்றையும், அதற்கான அவர் பெற்ற நாற்பதாண்டுதண்டனைக்