பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 தேசியத் தலைவர் காமராஜர் கொடுமைகளையும், பிள்ளையின் வீரச்செயல்களை மக்கள் நெஞ் சிலே மறக்கனற் கட்டிகளாகச் சூடேற்றியிருந்த கொதிப்புகளையும் கண்டும்-கேட்டும் உணர்ச்சியும் எழுச்சியும் அவர் பெற்றார். 'பூட்டிய இருப்புக் கூட்டை உடைத்து சிறுத்தையே வெளியே வா என்ற பாவேந்தரின் பா வுக்கு இலக்கணமாக, அவரது நெஞ்சிலே அந்நேரத்துக் கிளர்ச்சிகள் அரசியலில் ஈடுபாடுறுத்தும் எழுச்சிகளாக மாறி வித்திட்டன. அன்னிபெசண்ட் கைதான நிலை அன்னிபெசண்ட் அம்மையாரின் 1914-ஆம் ஆண்டு சுதேசி இயக்கக் கிளர்ச்சி இந்திய பூபாகமெங்கும் ஆங்கில ஆட்சியை எதிர்த்து ஒருவித மனப்புரட்சியாக உருவாகிக் காட்டுத் தீபோல எங்கும் பரவியது! அதனால், காங்கிரஸ் தலைவர்களும்-தொண்டர்களும் அரசியல் சார்பற்ற அறிஞர்களும் கனலாகிக் கொண்டிருந்த காட்சிகளை நாள்தோறும் பத்திரிகையிலே தொடர்ந்து கவனித்தார் காமராஜ்! அன்னிபெசண்ட் அம்மையார் ஆரம்பித்த சுயாட்சிக் கிளர்ச்சி சூடு பிடித்தக் கொதிப்பைக் கண்ட வெள்ளையர்கள்; இரட்டை ஆட்சி என்ற ஒர் ஆட்சி முறையை சட்டத்தின் மூலம் வழங்கியதை காங்கிரஸ் கட்சி மாநாடுகளில் காமராஜ் கேட்டார்! ஒருநாள் திடீரென்று, நீலகிரி மாவட்டத்திலே உள்ள உதகமண்டலத்தில். அன்னிபெசண்ட் அம்மையார் கைதானார். அவருடன் வாடியா, அருண்டேல் ஆகியோரும் காவலில் வைக்கப்பட்டனர் என்ற செய்தி, இந்தியாவை பரபரப்பூட்டியது. இது சாதாரண மக்களை மட்டுமல்ல; காங்கிரஸ் தலைவர்கள்தொண்டர்களையன்றி. இந்திய அறிஞர்களுக்குள்ளேயும் எதிர்பாராத ஒருவித அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த எழுச்சி, சுயாட்சி என்ற எரிசக்திக்கு எண்ணெய் ஊற்றியது போலானது வயதான ஞானாத் மாக்கள் எல்லாம் மூலைக் கொரு அறிக்கைகளை விடுத்துக் கண்டனக் குரலை எழுப்பி வாதாடலானார்கள்!