பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 103 1907-ஆம் ஆண்டு முதல் காங்கிரசிலேயிருந்து விலக்கி வைக்கப்பட்ட திலகர் அணியைச் சேர்ந்த தீவிரவாதிகள் எல்லாம். இந்த சுயாட்சிக் கிளர்ச்சி எழுப்பிய உணர்ச்சிகள் மூலமாக மீண்டும் காங்கிரஸ் கட்சியிலே சேர்ந்து கொண்டார்கள். மிதவாதிகளான கோபால கிருஷ்ண கோகலே அணிக்கும் பெசண்ட் அம்மையாரின் சிறைக் காவல் ஆத்திரத்தை மூட்டியது: பொதுமக்களில், நடுத்தர வர்க்கத்தினரும் இந்தக் கிளர்ச்சியிலே இணைந்து விட்டார்கள்! இவற்றை எல்லாம் சிந்தித்த காமராஜ் என்ற இளம் அரிமா, காங்கிரஸ் கட்சியின் முழு நேர ஊழியராக, தனது உடல், உயிர் அனைத்தையும் தேசவிடுதலைக்குக் காணிக்கையாக்கும் வைரமன உரம் பெற்றார்! ASAAAS A SAS SSAS AAAAAS ళ్ల ఫ్ల ఫ్లో ;