பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ઉ7છે ஜஸ்டிஸ் கோட்டை ரால் கலகலத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆள்கின்ற போது, அகில இந்திய அளவில் இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சி மட்டுமே இருந்தது! தமிழகத்திலே ஆட்சிபுரியும் மாநிலக் கட்சியாக ஜஸ்டிஸ் கட்சி விளங்கியது. ஜஸ்டிஸ் கட்சி எப்படித் தோன்றியது? ஜஸ்டிஸ் கட்சி, இராஜாக்கள் கட்சி, ஜமீன்தார்கள் கட்சி, மிட்டாதார்கள் மிராசுதார்கள் கட்சி! பணக்காரர்கள் கட்சி! சீமான்கள், பிரபுக்கள் கட்சி சரிகைத் தலைப்பாகையர் கட்சி! சர், ராவ் பகதூர், திவான் பகதூர்கள் கட்சி, என்றெல்லாம் அந்தக் கட்சியைப் பொதுமக்கள் மதிப்பீடு செய்வதுண்டு! இந்தக் கட்சியை நிறுவியவர்களிலே ஒருவரான தாரவார்த் மாதவன் நாயர் எனப்படும் டி.எம். நாயர் காங்கிரஸ் கட்சியிலே தீவிரவாதியாக விளங்கியவர்: 1898-ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்றது அகில இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டிலே அவர் கலந்து கொண்டவர் ஒரு தீர்மானத்தின் மீதும் உரையாற்றியவர்: இலட்சுமணபுரியில் 1899-ஆம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாடு, அதிலே சிறந்த பேச்சாளராகக் கலந்து கொண்டவர் நாயர் 1907-ஆம் ஆண்டு, சித்துர் மாவட்டக் காங்கிரஸ் மாநாடு, நாயர் தலைமையிலே தான் நடந்தது. சென்னை மக்கீஸ் கார்டன் என்ற இடத்தில் 1887-ஆம் ஆண்டு, அகில இந்தியகாங்கிரஸ் கட்சிமாநாடு நடந்தது; பத்ருதீன்தயாப்ஜி தலைமை வகித்தார். அந்த மாநாட்டிற்கு, ஜஸ்டிஸ்கட்சி நிறுவனர்களிலே ஒருவரான சர். பிட்டி. தியாகராயர் அக்கால நாணய மதிப்பில் இருநூறு ரூபாய் நன்கொடை கொடுத்தவர்.