பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 105 இண்டியன் நேஷனல் இயக்கத்தின் சாதனைகள்! 3);%u Gogadrā, śmāśgou (Indian National Congress) grop பெயரில், சென்னையிலே உள்ள இந்திய விடுதலைத்தாகம் கொண்ட தேசபக்தர்கள் எல்லாம் ஒன்று கூடி, ஒரு சங்கம் தோற்றுவித்தார்கள். துவக்கத்தில் அது மிதவாதிகள் (Moderates) அமைப்பாகவே இருந்தது! ஆண்டு தோறும் இந்த இண்டியன் நேஷனல் காங்கிரஸ் இயக்கம் சென்னையில் தீவிரமாக இயங்கியது. 1887, 1894, 1903, 1908, 1914ஆகிய ஆண்டுகளில் சென்னைநகரிலே நடைபெற்ற அகில இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி மாநாடுகள். பத்ரூதீன் தயாப்ஜி, ஆல்ஃபிரட் வெப்லால், மோகன் கோஷ், ராஷ் பிகாரி கோஷ், பூபேந்திரநாத் போஸ் போன்றவர்கள் தலைமையில் வரிசையாக ஆண்டுகள் தோறும் நடைபெற்றன. அந்த மாநாடுகளிலே எல்லாம் இந்த இண்டியன் நேஷனல் காங்கிரஸ் இயக்கம் தீவிரமாகப் பங்கேற்று நடத்தியது. Lää, ä gougy systiffsgir, "Leader from South" arsogy, "Bhavan's Journal" நூற்றாண்டு மலரில் எழுதிய கட்டுரையில் ஒர் அறிவு பலம் வாய்ந்த தேச பக்தக் குழு, அதன் தீவிரத் தொண்டுகள் மர்மமாக மறைக்கப்பட்டு விட்டது என்ன காராணத்தாலோ தெரியவில்லை. போதுமான அளவு பாராட்டுதலைக்கூட அந்தக் குழுவுக்கு அப்போது அளிக்கவில்லை என்று எழுதினாரே! அந்தக் குழு-இந்தஜஸ்டிஸ்கட்சிக்குச்சென்றுவிட்டகுழுவோ- என்னவோ, மர்மமாகவே இன்றும் இருக்கிறது! அந்த ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரஸ் தேசிய மகாசபை மாநாடுகள் எல்லாம், சென்னையில் நீதிக்கட்சிதுவங்குவதற்கு முன்பு நடைபெற்றவையே. 1907-ஆம் ஆண்டில், திலகர்தலைமையில்-தீவிரவாத அணியினர், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைமையைக் கைப்பற்றத் திட்டமிட்டு முயன்றனர். அந்த முயற்சியில் அவ்வணியினர்தோற்று விட்டனர். அதனால், அந்த கோஷ்டிகள் காங்கிரசை விட்டுப் பிரிந்து போனார்கள்! திருமதி அன்னிபெசண்ட்அம்மையார்-அந்த இரு அணிகளையும் ஒன்று சேர்க்க அரும்பாடு பட்டார்! அவரும் தோற்றார்! பிறகு, அம்மையார் 1915-ஆம் ஆண்டில் ஹோம் ரூல் இயக்கம் என்ற அமைப்பைத் துவக்கினார். 1916-ஆம் ஆண்டில், சென்னை சட்டசபையிலிருந்துடில்லி மத்திய சட்டசபைக்கு டாக்டர் டி.எம். நாயர்போட்டியிட்டார்.