பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 தேசியத் தலைவர் காமராஜர் அவர் வெற்றி பெறும் அளவுக்கு வாக்கு அளிக்கப்பட்டும் கூட, அந்த வாக்குகளில் நடைபெற்ற சூழ்ச்சிகளால், டி.எம். நாயர் பகிரங்கமாக, கேட்பார்வியக்குமளவிற்குத் தோற்கடிக்கப்பட்டார்: டி.எம்.நாயருக்குப் பதிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் என்றால், திருவாளர்கள் பி.என். சர்மா, வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி என்ற இரண்டு பிராமணர்கள் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்ட நாயர், தியாகராயர், பொப்பிலி ராஜா போன்றவர்கள் கூடி தமக்கென்று ஒரு தனிக் கட்சி தேவை என்று எண்ணத் தலைப்பட்டனர். பிராமணர் அல்லாதாருக்கு ஒர் இயக்கம் தேவையென்பதால், ஜஸ்டிஸ் கட்சி என்ற ஒரு கட்சி அப்போது தோன்றியது. திருமதி. அன்னிபெசண்ட் அம்மையார், திரு. டி.எம். நாயர் மேல் மானநட்ட வழக்கும் தொடர்ந்தார். ஆனால், எந்த வழக்குரைஞரையும் அவர் வாதாட வைக்காமல், தானே வாதாடி அந்த வழக்கிலே வெற்றி கண்டார்: இவ்வாறெல்லாம் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியிலே தீவிரமாகப் பங்கேற்ற ஆற்றலாளர், அறிவாளர், கல்வியாளர், பாரிஸ்டர், சீமான் டி.எம். நாயர் அவர்கள், பிராமணர் அல்லாதாருக்கென ஒரு கட்சியைத் துவக்க எண்ணியபோது, சர் தியாகராயச் செட்டியார், பனகல் ராஜா, பொப்பிலி ராஜா, டாக்டர் நடேசன், சர்.ஏ. ராமசாமி முதலியார், பாரிஸ்டர் எதிராஜ், பி.டி. ராஜன், போன்றவர்கள் எல்லாம் இப்போது ஒன்று கூடினர்; பிராமணரல்லாதாருக்காக தனி ஒரு கட்சியை உருவாக்கினார்கள்; அது தான் ஜஸ்டிஸ் கட்சி என்ற நீதிக் கட்சி. அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களான டி.எம். நாயர், திரு தியாகராயச் செட்டியார் போன்ற பிறரும், ஆரம்பத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியைத் தாய்க் கட்சியாக ஏற்றவர்கள்; அதை வளர்த்தவர்கள் அந்தக்கட்சியிலே ஏற்பட்ட இன-சாதி-பண்பாட்டு மாறுபாடுகளால் ஜஸ்டிஸ் கட்சி தோன்றியது! காங்கிரஸ் கட்சி என்ற தாய் பெற்ற பிள்ளைகள்தாம்; ஜஸ்டிஸ், கம்யூனிஸ்ட், சோசலிஸ் ட், பிரஜாசோசலிஸ் ட், பூமிதானம் சர்வோதயா, பார்வர்டு பிளாக், போன்ற பிற எல்லாக் கட்சிகளும்! கம்யூனிஸ்டுக்கும், சோசலிஸ்ட்களுக்கும் வேண்டுமானால், மேலை நாட்டுக் கொள்கைப் பாரம்பரியம் இருக்கலாம்! ஆனால், பிற எல்லாக் கட்சிகளுக்கும் காங்கிரஸ்தான்தாய்க்கட்சி என்பதை எவரும் மறுக்க முடியாது.