பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 107 இப்படிப்பட்ட கொள்கை ஏறுகளைக் கொண்ட கட்சிகளை எல்லாம், மூத்த காங்கிரஸ்காரர்கள் எனப்படுவோர், எப்போதும் எங்கும், மேடைஏறித்தாக்கிப்பேசுவதில்லை காரணம் நேற்று வரை அவர்களும் உடன் பிறவாச் சகோதரர்களாகவே காங்கிரசில் இருந்தவர்கள், உழைத்தவர்கள் என்பதால்! நாலாந்தர அரசியல் நடனமாடிகள் தாம், ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களை வெள்ளைக்காரன் ஏஜெண்டுகள், வெள்ளையன் வால் பிடிப்போர், ஏகாதிபத்திய தாசர்கள், நாட்டுப்பற்றற்றத் துரோகிகள், எட்டப்பர்கள் என்றெல்லாம் பழி கூறி மேடைகளிலே - ஏடுகளிலே தாக்கி எழுதியும் பேசியும் வந்தார்கள். தலைவர் காமராஜ், ஜஸ்டிஸ் கட்சியை, விருதுநகரிலே கடுமையாக எதிர்த்தார் கூட்டத்திற்குக் கூட்டம் போட்டியாக நடத்தினார் ஜஸ்டிஸ் கட்சி நடத்தும் கூட்டத்திற்குத் தனது நண்பர்களை அனுப்பி குறிப்பெடுத்து வரச் செய்வார் பதிலடியும் கொடுப்பார் ஆனால், தாக்கும் பண்பற்றவர்: திரு.வி.க.வும் அவரது குருவும் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்கள், இராயப்பேட்டை வெஸ்லி உயர்நிலைப்பள்ளியில் படித்த போது, சதாவதானி நா. கதிரைவேற்பிள்ளையின் மாணவராகப் படித்தவர்: நாவலர் திரு. கதிரைவேலர் தாம் ஒப்புக் கொண்ட மருட்பா போர்க்களத்திற்கு வருகை தரமாட்டார்! அருட்பா தளபதியான அடிகளார், தவறாமல் களக்காட்சிகளிலே வந்து நிற் பார்! பாவலரும் அவ்வாறே பவனி வருவார்: மருட்பா போர் தளபதி அடிக்கடிக் களம் வராமல் நின்றுவிடும்போது, மாணவர் திரு.வி.க. தனது குருவான தவத்திரு சதாவதானி கதிரைவேலருக்கு, தவத்திரு மறை மலையடிகளார் பேசும் மருட்பா மறுப்புக் குறிப்புகளையும், அருட்பா அருளும் அருட் குறிப்புகளையும் குறிப்பெடுத்துக் கொண்டுபோய், தனது வகுப்பு ஆசிரியரான கதிரை வேலரிடம் கொடுப்பார் மருட்பா அணிக்காக ஒற்றாடுவார் திரு.வி.க. அருட்பா அணியிடம்! அந்தக் குறிப்புகளைப் பெற்ற கதிரைவேலர், அடுத்தக் கட்டப் போருக்கான கள வாதங்களுக்கான ஆயுதங்களைத் தயார் செய்து கொள்வார் பதிலுக்குப் பதிலாயுதங்களைப் பயன்படுத்துவார்: இறுதியில் அருட்பாவே அருள்பாலிக்கும் வெற்றித் திருமகளாக!