பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 தேசியத் தலைவர் காமராஜர் அதனைப் போல, வாலிபர் காமராஜ் விருது நகரிலே, சுற்று வட்டாரங்களிலே, சூழ்ந்துள்ள நகர்ப் பகுதிகளிலே எங்கும் ஜஸ்டிஸ் கட்சிக் கூட்டங்கள் நடந்தாலும், தனது பொடிக்கடை நண்பர்களை அங்கங்கே அனுப்பி வைப்பார். குறிப்பாக, கே.எஸ். முத்துசாமி, முருகதனுஷ்கோடி போன்றவர்கள், வாலிபர் காமராஜுக்குத் திரு.வி.க. வைப் போல் பயன்படுவார்கள். நண்பர்கள் குறிப்பெடுத்துக் கொண்டு வரும் ஜஸ்டிஸ் கட்சிப் பேச்சுக்களுக்கு, காமராஜ் அடுத்த மேடைகளிலே அதிரடிப் பதில்களை அதிர்ச்சியடையுமாறு கொடுப்பார்! கூட்டத்திற்குக் கூட்டம் மட்டுமல்ல, பேச்சுக்குப் பேச்சு, ஊர்வலத்திற்கு ஊர்வலம், அலங்காரத் தோரணங்களுக்குத் தோரண அலங்காரங்கள், கொடிக் காட்சிக்குக் கொடிக் காட்சி போன்று எல்லாவற்றுக்கும் போட்டிகளை உருவாக்கி, ஜஸ்டிஸ் கட்சியைக் கலகலக்க வைப்பார்: காமராஜின் இந்தக் கடுமையான அரசியல் களங்களின் வியூகங்களைக் கண்ட காங்கிரஸ் நாடார்களே அவரோடு பேசமாட்டார்கள் உறவாட மாட்டார்கள் ஏன்? அப்போது, ஜஸ் டிஸ் கட்சி ஆட்சி சென்னையிலே நடைபெற்றதால், இவரோடு பேசினாலும், பழகினாலும் தத்தமது வணிகத்திற்கு ஏதாவது குந்தகம் ஏற்படுமோ என்ற அச்சம்தான் காரணம்! ஜஸ் டிஸ் கட்சியின் கோட்டையான விருது நகரிலே குத்துவெட்டா? எதிர்ப்புக்கு எதிர்ப்பா? சிங்கத்தின் குகைக்குள்ளே சிறுநரிகளின் தந்திரசித்து விளையாட்டுக்களா? என்ற வினா-ஊரில் எழவில்லை; காவல் நிலைய அதிகாரிகளிடையே எழ வைத்தனர். தமிழக ஆட்சியினரான ஜஸ்டிஸ் சீமான்கள்! காவல்துறை, காமராஜைக் கண்காணித்தது! இந்த நிலை காமராஜுக்கும் புரிந்தது! ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இவ்வாறு வாலிபர் காமராஜர், ஜஸ்டிஸ் கட்சியின் செல்வச்செருக்குப் பணிகளை எதிர்த்துப் போர்க் கொடி ஏந்திச் செயற்கரிய செயல்களைச் செய்து வந்தார். அக்கம் பக்கம் நகர்களின் அரசியல் விவகாரங்களை அறிந்து வர, காமராஜ் அடிக்கடி மதுரை, நெல்லை, திருச்சி, போன்ற முக்கிய இடங்களுக்கெல்லாம் சென்று வருவார்.