பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டுதலை வேள்விக்கு விலையற்ற தியாகங்கள்! ஒரு நாட்டிற்கு விடுதலை என்பது தியாக விலையின்றிப் பெறவியலாதது; உலக வரலாற்றிலே சுதந்திரம் பெற்ற நாடுகள் எல்லாம், சுதந்திரத்தை மலர் தூவிய பாதைகளிலே ராஜ நடை நடந்து பெறவில்லை. பல தியாகங்களாலேயே பெற்றது. அடிமையின் அவலங்கள் அடிமைத்தனம் என்ற அனற்பாதைகளிலே தத்தளிக்கும் தரித்திரச் சென்மங்கள், அமணத்துறவிகளைப்போல,தலைமயிரைப்பிய்த்துக் கொண்டு அகோர அம்மணங்களாய் உடற்கூறுகள் உருகி, கருகிச் சாகத்தானே வேண்டும்? எரிமலைகளும் பூகம்பங்களும், இருண்ட நெடுங்காடுகளும் பாலைவனப் பதை பதைப்புகளும், அடிமை நாட்டில் அடிக்கடி ஏற்படத்தானே செய்யும்! ஆணவச் செங்கோலை நடத்தும் ஆங்கிலேயர் ஆட்சியிலே நறுமணப் பூங்காக்களும், பழமுதிர் சோலைகளும், மலைபடு பொருட்களும் மணம் கொப்பளிக்கும் சந்தனக் காடுகளுமா; மக்கள் வாழ்வில் தோன்றித் தோன்றிப் பயன்தந்து மகிழ்வூட்டும்? ஆணவமும், அடிமைத் தனமும் ஒராட்சியிலே எங்கெல்லாம் கொடி கட்டிப் பறக்க விடப்படுகின்றனவோ, அங்கெல்லாம் உயிர்த் தியாகங்கள் விடுதலை வேள்வித் தீயிற்கான எண்ணெய்த் துளிகளாகச் செந்நீரே ஊற்றப்படுவதைப் படித்திருக்கின்றோம்! ஆனால், இந்திய நாடு ஒன்று தான், அண்ணல் பெருமான் காந்தியடிகள் தலைமையிலே கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமற்ற ஒரு தேசிய எதிர்ப்பைச் செய்து காட்டியது! பஞ்ச நதிபாயும் பாஞ்சால நாட்டின் படுகொலைகளால், பாரத நாட்டில் மூண்டு விட்ட கொடுமையான நிலைகளையும், பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய் கோரமாகத் தாக்கப்பட்டு மரணப் படுக்கையிலே கிடந்த அக்ரமமானசம்பவங்களையும், நாள்தோறும்