பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 111 அடுக்கடுக்காகப் பத்திரிகைகளிலே படித்தக் காமராஜ் என்ற வாலிபருக்கு - மனம் அலைகடலானது நாளாகவாகப் பொங்குமாங் கடலாக அவை கொந்தளிக்க ஆரம்பித்தது. இவற்றையெல்லாம் சிந்தித்தக் காமராஜ், காங்கிஸ் கட்சியின் முழுநேர ஊழியராக - தனது உயிர், உடல் அனைத்தையும் அதன் வளர்ச்சிக்காக, காணிக்கையாக்கத் தயாரானார்: பஞ்சாப் படுகொலை: காமராஜ் சபதம்! ஜாலியன்வாலாபாக்துப்பாக்கிப்பிரயோகப் படுகொலைகளை எதிர்த்து, இந்தியா முழுவதும் கடையடைப்புகள், பொது வேலை நிறுத்தங்கள் நடந்தன! 1919 ஏப்ரல், 13ஆம் நாளன்று, அமிர்தசரஸ் நகரில் கண்டனக் கூட்டம் நடைபெற்ற இடத்தின் பெயர்தான்ஜாலியன் வாலாபாக்! அந்த மைதானம் மூன்று பக்கமும் மிக உயர்வான சுவர்களையுடையது! ஒரு பக்கத்தில் மட்டும் சிறு நுழைவு வாயில்! ஏறக்குறைய இருபதாயிரம் மக்கள் அங்கே கூடியிருந்தார்கள் - ஆங்கில ஆட்சியைக் கண்டனம் புரிய ஜாலியன் வாலா பாக் திடலில் இருந்த ஒரேநுழைவு வாயிலில் நின்று கூடியுள்ள இருபதினாயிரம் மக்களும் மூன்று நிமிடத்தில் வெளியேற வேண்டும்! இல்லையானால் துப்பாக்கித் துந்துபிகள் முழங்கும் என்று, கூறியபடி வெறியன் டயர் என்பவன் மக்களை நோக்கிச் சுட்டான்; துப்பாக்கியிலிருக்கும் குண்டுகள் தீரும் வரை சுட்டான். ஜாலியன் வாலாபாக் தோட்டத்திலிருந்து மக்கள் வெளியேற பல வழிகள் இருந்ததாக தளபதி ஜெனரல் டயர் எண்ணிக் கொண்டார் என்றும், அதனால் தான் அவர் நீண்ட நேரம் சுடுமாறு கட்டளையிட்டார் என்றும், எட்வர்டு தாம்சன் என்ற ஆங்கில அதிகாரி அப்போது அறிக்கை விட்டார்! ஜாலியன் வாலா பாக் தோட்டத்தைச் சுற்றிப் பல மெத்தை வீடுகள் இருந்தன. ஒரே ஒரு சந்து ஒன்றிலே மட்டும் வீடே இல்லாமல் நீண்ட சுவர் ஐந்தடி உயரமளவு இருந்ததாம்! ஜெனரல் டயர், அங்கே சுடும் போது அந்தக் குண்டுகளிலே இருந்து தப்பித்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மக்கள் சுவரை நோக்கி ஓடி வந்து, அதன் மேலே ஏற முயன்றார்கள்: