பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 தேசியத் தலைவர் காமராஜர் வெறியன் டயர் அப்போது சுவர் மேல் ஏறுகின்றவர்களை நோக்கிச் சுடச் சொன்னான்! இராணுவப் படையிடமிருந்த துப்பாக்கிக் குண்டுகள் எல்லாம் சுட்டுத் தீர்த்து விட்ட பிறகு தான். பார்த்தான் அவன் சுவரின் கோரக் காட்சிகளை அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு! சுவரோரம் சுருண்டு சுருண்டு விழுந்து கிடந்தன சுருள் சடலங்கள்! எங்கு பார்த்தாலும் ரத்த வெள்ளம் குட்டை குட்டைகளாய்த் தேங்கிக் கிடந்தன! காயம் பட்டவர்களின் உடல்களிலே வழியும் ரத்த ஊற்றுக் கண்களிலேயிருந்து, செந்நீர் வடிந்தபடியே இருந்தன; அலறல்கள் ஒர் புறம்! முனகல்கள் மறுபுறம்! காமராஜ் சபதம்! பஞ்சாப் படுகொலையாம் ஜாலியன் வாலாபாக்கின் கோரக் காட்சிகளைக் காமராஜ் பத்திரிகைகளிலே படித்தார்! ஆங்கில ஏகாதிபத்தியத்தின் ஆணி வேரை அறுத் தெறியும் வரை ஓயமாட்டேன் என்ற சபதத்தை அவர் நெஞ்சிலே ஏற்றார்: ஜாலியன் வாலா பாக் கோரங்கள், காங்கிரஸ்காரர்களிடையே ஏற்படுத்திய பரபரப்புணர்ச்சி, காமராஜ் நெஞ்சையும் நெருப்புக் காடாக்கி விடுமே என்று, விருதுபட்டியிலே உள்ள அவரது உறவினர்கள் எல்லோருமே அஞ்சினார்கள்! எச்சரிக்கையோடு அவரைக் கண்காணித்தார்கள்! அதனால், திருவனந்தபுரத்திலே உள்ள அவருடைய தாய்மாமன் காசி நாராயணன் கடைக்குக் காமராஜரை அனுப்பி வைத்தார்கள் - அருடைய தாயாரும், உறவினர்களும்! அங்கே சென்றும் கூட, அவருடைய தேசியப் பணிகளைக் கடையிலிருந்தவாறே செய்து வந்தார் அதிலே ஒன்று அவர் கலந்து கொண்ட வைக்கம் போராட்டம்! கேரள மாநிலத்திலே உள்ளது வைக்கம் என்ற ஊர்! அங்கே உள்ள ஆதிதிராவிடர்களை ஆலயத்திலே நுழைய விட வேண்டும் என்ற போராட்டம் அங்கு நடந்து வந்தது! உள்ளூர் காங்கிரஸ்காரர்கள் எல்லாரும் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதாகி விட்டார்கள் வைக்கம் போராட்டம் அங்கு நாள்தோறும் நலியத்தொடங்கியது. அந்த நிலையில் காங்கிரஸ் தலைவராக இருந்தவர் தந்தை பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்கள். அந்தப் போராட்டத்திலே