பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 4 - தேசியத் தலைவர் காமராஜர் காங்கிரஸ் கட்சியின் தொண்டுகளை அவர் ஆற்றும் போது, அஞ்சாநெஞ்சமும் அடங்கா ஆத்திரமும் அடிக்கடி அவரிடம் எதிரொலித்தன காரணம், இளமையின் வார்ப்பு அல்லவா? அந்த எழுச்சி, அவரது துணிவைத் துண்டியது! அதனால், அரசியல் கிளர்ச்சிகளில் தாமே நேரில் ஈடுபட வேண்டும் என்ற முடிவுக்கு அவர்தள்ளப்பட்டார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் விருதுபட்டி நகரக்கிளைக் கட்சியிலே காமராஜ் உறுப்பினராகச் சேர்ந்தார்; காங்கிரஸ் பிரசாரத்தைக் கிராமங்கள்தோறும்அவர்செய்தார்; மக்கள் ஆதரவைத் தன் பக்கம் திரட்டிக் கட்சிக்குப் பலம் உருவாக்கினார்; தனக்குப் பின்னாலேதுணிகரமாகத் திரண்டெழும் வாலிபர்களையும் மக்கள் அணிகளையும் சேர்த்தார். இரயில் நிலையங்கள் - கடைவீதிகள் - பேருந்து நிலையங்கள் - சந்தைகள் கூடும் ஊர்கள், அங்கே திரளும் மக்கள் ; திருவிழாக்கள் போன்ற இடங்களுக்கெல்லாம் காமராஜ் மூவண்ணக் கொடிகளுடன் சென்று கூட்டம் போடுவார்; பேசுவார். கருத்த முகம் கொண்ட காமராஜ் தாம்பேகம் கூட்டத்தில், மக்கள் முகம் சிவக்க உணர்ச்சி உமிழப் பேசுவார் ஆர்ப்பரித்த ஆவேசம் அவரிடம் அப்போது ஆட்டம் போடும்! விருதுநகரில் அவருடன் கல்விகற்ற பள்ளி நண்பர்கள், காமராஜ் என்ன கூறுகிறார் என்பதையே எப்போதும் எதிர் நோக்குவார்கள் - எடுத்த பணிகளைப் பொங்கும் ஊற்றத்தோடு ஊர்தோறும் பரவலாகப் பணிபுரிந்திட! அதனால், பொறுப்புடன் எதையும் பேசுவார்! வார்த்தை வாதங்களை வம்படிக் கூச்சலாக்காமல், வரம்புக்குட்பட்ட உணர்வுகளைவரையறுத்து, கேட்போர்நம்பிக்கை பெறுமளவிற்குப் பேசுவார்; கடமையாற்றுவார் உடனுள்ள நண்பர்களும் - மக்களும் உலை அனல்பட்டபுழுக்களைப் போன்று போராட்டஉணர்வுகளைக் காமராஜர் பேச்சால் கேட்டுத்துடிப்பார்கள்! அடிபட்ட கொசுகூட அடுத்த விநாடிதுடித்தெழுந்து பறந்தோட உயிர்த்தெழுவதைப்போல, அவருடைய நண்பர் அணிகள் எந்த இடுக்கண்களையும் ஏற்றுப் பணியாற்றமுற்பட்டார்கள். அரசியலில் விடுதலைப் போராட்ட விளைவுகளின் வேள்வித் தீயிலே, சில தியாகப் பொறிகளாகத் திகழும் மனப் பக்குவத்தை அவர்களுக்கு உருவாக்கினார்காமராஜ்.