பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 115 அத்தகைய அரசியல் வகுப்புகளாக அமைந்தன, அவருடைய பொதுக்கூட்டப் பேச்சுகளும் போராட்டக் கடமைகளும், பொறுப்பான ஊர்ச் சேவைகளும் மக்கட் தொண்டுகளும்! இவ்வாறு காமராஜ் ஆற்றும் அரசியல், அடிமட்டத் தொண்டர் எழுச்சி, எதிர்க் கட்சியான ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களுக்கும் - ஆங்கிலேயராட்சிக்கும் ஒரு மருட்சியை உருவாக்கியது. இந்த மருட்சியின் எதிரொலி என்ன? காமராஜ் நடத்தும் காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களிலே கற்கள் வீச்சு, கலவரம், கலகம் முதலிய அராஜக எதிர்ப்புகளை அது உருவாக்கும்! எந்த எதிர்ப்புகளையும் ஏற்கும் அரசியல் ஏறெனத் தனது கட்சிப் பணிகளைக் காமராஜ் ஆற்றினார் எதிர்ப்புகளை ஏணிகளாக்கிக் கொண்டார் எதிர்ப்புறக் கலகங்களையும் கலவரங்களையும் தனது அரசியல் விழிகளில் படரும் எழில் ஒளிகளாக ஏற்றார்: விருதுநகர், ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் கோட்டையாக விளங்கிய பேரூர் பணக்காரர்களால் பளபளத்த ஊர் பதவிகளால் ஒளிபெற்ற அதிகாரச் செருக்கேற்றிய ஊர்! அதனால், அடிக்கடி காங்கிரஸ் கட்சிப் பணிகளிலே கஜகர்ணம் கோகர்ணம் போடுவார்கள் - காமராஜ் ஆற்றும் கடமைகளைத் தகர்க்க அவர்கள்! கள்ளுக்கடை மறியல் போர்! காந்தி பெருமான், 1920-ஆம் ஆண்டு துவக்கிய ஒத்துழையாமைப் போரில், சில தொண்டர்கள் செளரி செளரா என்ற ஊரில் காவல் நிலைய ஆய்வாளரையும் - 21 காவலர்களையும், காவல் நிலையத்துள் பூட்டித் தீவைத்ததால் அனைவரும் இறந்தார்கள்! இதைக் கேள்விப்பட்ட காந்திபிரான், இது தனது அகிம்சா தத்துவத்திற்கு எதிரானதென்று கருதி, திடீரெனப் போராட்டத்தை நிறுத்திவிட்டார். ஆனால், அந்த இயக்கம் தமிழ்நாட்டில் மட்டும் தனது போராட்டத்தை நிறுத்த வில்லை! அது கனலாகத் தகித்தது தமிழ் நாட்டில் அந்தக் கனலின் வெப்பத்தைப் பிற கட்சிகளும் - மற்ற மாநிலங்களும் - இந்திய மக்களும் புரிந்து கொள்ளும் வகையில், கள்ளுக்கடை மறியல் போராட்டமாக மாறியது! ஏன், திருமண எதிர்ப்பு? காங்கிரஸ் நடத்தும் போராட்டங்களிலே காமராஜ் அவர்கள் கலந்து கொள்வதும், அடிக்கடி அவர் வெளியூர் சென்று அங்கங்கேயே தங்கி விடுவதும், அவரது அன்னையாருக்கு அச்சத்தை விளைவித்தது!