பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 6 தேசியத் தலைவர் காமராஜர் அதற்கேற்ப, உள்ளூர் பணக்காரர்கள் அன்னையாரிடம் தூதனுப்பி, அவரை அடக்குமாறு ஆணையிட்டார்கள். காவல் துறையிலே உள்ளவர்கள், காமராஜைப் பின் தொடர்ந்து கைது செய்யும் சமயத்தை எதிர்நோக்கி இருந்தார்கள் என்ற செய்தி சிவகாமியம்மையார் செவிக்கு எட்டிற்று! அதனால், ஒரு பெண்ணைப் பார்த்து வாலிபர்காமராஜுக்கு ஒரு கால்கட்டுப் போட்டு விட்டால், எல்லாம் சரியாகி விடும் என்று அன்னையார் சிவகாமி எண்ணி அவருக்குத் திருமண ஏற்பாடுகளைச் செய்தார். காமராஜ் அவர்களது சம்மதம் பெறாமலேயே, சிவகாமி அம்மையார், தனது சகோதரர் கருப்பைய நாடாருடன் கலந்து, திருமணத்திற்குரிய எல்லா ஏற்பாடுகளையும் செய்து வந்தார். எப்படியோ தாயாரின் எல்லா முடிவுகளையும் அறிந்து கொண்ட காமராஜ், தனது தாயாரையும், மாமனையும் அழைத்து, இனிமேல் கல்யாணப் பேச்சை எடுத்தால், என்னை அறவே நீங்கள் பார்க்க மாட்டீர்கள், மறந்துவிட வேண்டியது தான், என்ற தனது அறுதியிட்ட இறுதியை உறுதியாகக் கூறிவிட்டார்: வேறுயாராவது அவரிடம் தூது அனுப்பிச் சொல்லச் சொல்லலாம் என்று இருவரும் கூடிக் கலந்து சிந்தித்தார்கள்? பெற்ற மனம் பித்தல்லவா? திருமணம் விடு துதுக்காக எவரெவர் வந்தார்களோ அவரவர்களிடம் எல்லாம் பிள்ளை மனம் கல்லு என்பதைக் காமராஜ் மெய்ப்பித்தார். அன்று முதல், அவருக்கு நினைவாலயம் நிறுவும் வரை அவருடைய திருமணப் பேச்சு, எவராலும் மீண்டும் எழுப்பப் படவே இல்லை! - 1922-ஆம் ஆண்டு, சாத்துர் வட்டம் காங்கிரஸ் கட்சி மாநாடு. பெரியார் ஈ.வெ. ராமசாமி தலைமையில் அவரை அழைத்துக் காமராஜ் நடத்தினார். அந்த மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராகத் காமராஜ் பணியாற்றினார். அப்போது தான் அவர் காங்கிரஸ் கட்சியின் சாதாரண உறுப்பினரிலே இருந்து, தமிழ்நாடு காங்கிரஸ்கட்சி செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக காமராஜின் அரசியல் வளர்ச்சி, ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களின் கோட்டையைத் தகர்த்துக் காங்கிரஸ் கோட்டையாக மாற்றுமளவுக்குப் பயன்பட்டது.