பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 117 மதுரை மாநகர் - கள்ளுக்கடை மறியல்: மகாத்மா காந்தி அவர்களின் ஒத்துழையாமைப் போர் நிறுத்தப்பட்டபிறகு, அதன்எதிரொலியாக 1923-ஆம்ஆண்டு, மதுரை மாநகரில் கள்ளுக்கடை முன்பு மறியல் போராட்டத்தைக் காமராஜ் ஏற்று நடத்தினார். மதுரை நகர காங்கிரஸ் கட்சி அலுவலகம், ஓர் ஒட்டு வீட்டு மாடியிலே இயங்கியது. அங்கே மறியல் தொண்டர்கள்கூடுவார்கள்; எவ்வாறெலாம் போராட்டத்தை நடத்தலாம் என்று திட்டமிடுவார்கள் ஒருநாள், அவ்வாறு கூடிக் கலந்து பேசிய பின்பு, மாவட்டக் காங்கிரஸ் முக்கியஸ்தர்களிடையே போராட்ட நடவடிக்கை களுக்குரிய பிற வசதிகட்காகப் பேசிட, சிலரைச்சந்திக்கச் சென்றார். காமராஜ், வெளியே சென்று விட்டதைக் கண்ட மதுரைக் காவலர் துறை அதிகாரி ஒருவர், திடீரென அலுவலகத்திலேயே தி.புதிபுவெனச்சில காவலர்களுடன் புகுந்தார். எவரும் எதிர்பாராத அவ்வேளையில், அங்கிருந்த மறியல் தொண்டர்களை எல்லாம் கைது செய்தார். பின்பு பணிமனையையும் பூட்டி விட்டார். திரும்பி வந்த காமராஜ், பூட்டப்பட்ட மறியல் பணிமனையைக் கண்டார்; கைது செய்யப்பட்ட தொண்டர்கள் விவரத்தையும் கேட்டு வியப்படைந்தார் எல்லாரையும் கைது செய்து விட்டு என்னை மட்டும் வெளியே விட்டு விட்டார்களே, ஏன் என்று சிந்தித்து ஆராத்துயரடைந்தார். சத்தியமூர்த்தி சந்திப்பு! காந்தியடிகள் ஒத்துழையாமைப் போரைத் திடீரென நிறுத்தியதால், நாடெங்கும் அவர்மீது கண்டனம் எழுந்தது: அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியில், அதனால் கொள்கைச் சிக்கல் உருவாயிற்று. தமிழகத்திலும் அதே குழப்பம் தலைதூக்கிற்று. காங்கிரஸ் கட்சி சுதந்திரம் பெறுவதற்காகச்சட்டசபைக்குள்சென்று பணியாற்றுவதா? அல்லது, வெளியே இருந்து கொண்டே போராடுவதா? என்பதே அந்தச்சிக்கல்: திருவாளர்கள் தேசபந்து சித்தரஞ்சன் தாஸ், மோதி லால் நேரு, எஸ். சீனிவாச ஐயங்கார், புலாபாய் தேசாய், எஸ். சத்தியமூர்த்தி ஆகியோர் அணியில், சுயராஜ்ஜியக் கட்சி தோன்றியது! அது சட்ட சபை நுழையும் அணியாக வளர்ந்தது!