பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 தேசியத் தலைவர் காமராஜர் சக்கரவர்த்தி சி. இராஜகோபாலாசாரியார் தலைமையில், சட்டசபையில் நுழைந்து போராடுவதை எதிர்க்கும் பணியை, தமிழகத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி ஊக்குவித்தது! காங்கிரஸ் கட்சி என்ன தீர்மானம் செய்கின்றதோ - அதற்கேற்பவே நான் நடப்பேன் என்றார் திரு காமராஜ், இப்படி பகிரங்கமாகக் கூறியதுடன் - உறுதியாகவும் நடந்தார் . பணியாற்றவும் செய்தார்: எஸ். சத்தியமூர்த்தி தான்காமராஜின்அரசியல் ஆசான் என்றும், அரசியல் சித்துக்களைச் செய்வதற்காகவே சத்தியமூர்த்தி காமராஜைப் பயன்படுத்தினார் என்றும், பிற்காலத்தில் தனக்குப் பழி குழுமோ என்பதை அன்றே புரிந்துகொண்ட காமராஜ், அப்போது - அவரைப் பகிரங்கமாகவும், அரசியல் ரீதியாகவும், கொள்கைப் பிடிப்போடும் எதிர்த்தார் என்றே - நமக்குப் புரிகிறது அல்லவா? சுயராஜ்ஜியக் கட்சி சட்ட சபை நுழைவை, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி ஆதரித்த பின்பு, அதற்கான தேர்தல் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்குமாறு காங்கிரஸ் காமராஜூக்கு கட்டளையிட்ட பிறகே, அந்தப் பணிகளை அவர் ஏற்றார்; தொடர்ந்தார்! கட்சியின் கருத்துக்கு ஏற்றவாறு, எஸ். சீனிவாச ஐயங்காருடனும், எஸ். சத்தியமூர்த்தியுடனும் இணைந்து, காமராஜ் தனது தேர்தல் பணிகளை ஆற்றினார். காமராஜ் ஏற்ற தேர்தல் பணிகள் 1926-ம் ஆண்டில் பொதுத் தேர்தல் வந்தது: ஜஸ்டிஸ் கட்சியை எதிர்த்து சுயராஜ்ஜியக் கட்சி சட்டசபைக்குப் போட்டியிட்டது! அதற்கான பணிகளைக் காமராஜரே முன்னின்று நடத்தினார்: தேர்தல் பிரச்சாரத்தை சுயராஜ்ஜியக் கட்சிக்காகச் செய்திட, மாவீரர் காமராஜ் விருதுநகரிலிருந்து தொண்டர் படை அணிகளுடன் பூரீ வைகுண்டம், நாசரேத், ஏரல் ஆகிய நகரப் பகுதிகளுக்குச் சென்றார்: அவருடன், முருக தனுஷ்கோடி என்ற அவரது பள்ளி நண்பரும், பிற காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டு சென்று தேர்தல் வேலைகளைச் செய்தார்கள். இந்த முருக - தனுஷ்கோடி என்பவர் தான், பிற்காலத்தில் தலைவர் காமராஜ் விரும்பியதற்கேற்றவாறு, காங்கிரஸ் கட்சிக்கென நவசக்தி என்ற நாளேட்டினைத் துவக்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.