பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 119 நீலன் சிலையை அகற்றப் போர் இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று வரலாற்றாசிரியர் களால் வரையறுக்கப்பட்டது சிப்பாய் புரட்சி என்ற இராணுவப் போர். ஜெனரல் நீல் என்ற வெள்ளையன், அந்தச்சிப்பாய்ப் புரட்சியின் போது, மனித சுபாவங்களுக்கு மாறானகொடுமைகளைச்செய்தான். இராணுவத்தில் காட்டுத்தர்பாரை நடத்தி வந்தான். வெள்ளையராட்சி, அவனது மிருகத்தனமான நடவடிக்கை களைப் பாராட்டும் வகையின் நினைவாக, சென்னை மவுண்ட்ரோடு என்ற அண்ணாசாலையில், நீல் என்ற அந்தக் கொடியவனுக்கு சிலை ஒன்றை நிறுவியது! நிறுவிய இடத்தைவிட்டு அந்தச் சிலையை அகற்ற வேண்டும் மனித நேயமற்றவனுக்கு சென்னை மாநகரின் இதயம் போன்ற மவுண்ட்ரோட்டில் சிலை இருப்பதா? அதை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் வீரர்கள்.ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அதுதான்நீலன்சிலை அகற்றும் போர். அந்தப் போராட்டத்தில், குடியேற்றம் சாமிநாத முதலியார், சோமயாஜுலு போன்ற காங்கிரஸ் இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள். இறுதியாக அந்தக் கிளர்ச்சியை ஏற்று நடத்திடக் காமராஜ் அவர்கள் பொறுப்பை ஏற்றார். பரபரப்புடன் அதற்கான பணிகள் நடந்தன. அறிவெல்லாம் அருங்கனியாகும்போது அண்ணல் காந்தியடிகள் இந்திய அரசியலில் காலடி வைத்தார்: அதற்கான அரிச்சுவடி நெறிகளையெலாம் அகிம்சாதத்துவத்துக்குள் அடக்கி, அறப்போர் ஆற்றிய மறப்போர் பலம் கொண்ட அரசியல் அரிமாவாகத் திகழ்ந்தார். அன்பெலாம் பூத்து, அறமெலாம் காய்த்து அற்புத மனித நேயமெலாம் பழுத்த அரிய புகழால் செழித்த தமிழ் மண்ணான சென்னைமாநகரில் அடிகள் முதன்முதலாகக் காற்சுவடு பதித்தவர். பின்னர், பலமுறை தமிழகம் வந்த அவர் பயண வருகையில் ஒருநாள் 21.9.1921-ம் நாள். சங்கம் வைத்து மொழி வளர்த்த பாண்டியர்மண்ணானமதுரை மாநகருக்கு அன்று மாலை 6மணிக்கு காந்தியடிகள் வருகைதந்தார். . கல்லூரி மைதானத்தில் காங்கிரஸ் கூட்டம் நடைபெற்றது. கூட்ட நாடக மேடையிலே முருகன் வேடத்தோடு கொக்கு பறக்குதடி பாப்பா, வெள்ளை-கொக்கு பறக்குதடி பாப்பா என்ற பாடலைப் பாடியபடியே உயிர் நீத்த தேசபக்தர் எஸ். எஸ். விசுவநாததாஸ்.அக்கூட்டத்திலே தேசியப் பாடல்களைப் பாடினார்.