பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தேசியத் தலைவர் காமராஜர் அப்போது காந்தியடிகள் பேசிய ஆங்கில உரையை எஸ். டி. கிருஷ்ண ஐயர் மொழி பெயர்த்தார். அந்தக் கூட்டத்தில் தான் பிற்காலத்தில் காலா காந்தி என்று பாரதநாட்டு மக்களால் போற்றப்பட்ட காமராசர் அவர்கள் முதன் முதலாகக் காந்தியடிகளைப் பார்க்கிறார். அதற்குப்பிறகுகாந்தி பெருமான்1927-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வருதை தந்தார். சென்னையிலே அடிகள் எஸ்.சீனிவாச ஐயங்கார் இல்லத்திலே தங்கியிருந்தார். அண்ணலிடம் காமராஜ் ஆட்சி! அண்ணல் காந்தியடிகளைச்சந்தித்து நீலன் சிலையை அகற்றும் போராட்டத்தை எப்படியெப்படி நடத்தலாம் என்ற யோசனைகளைக் கேட்டறிய காமராஜ், ஐயங்கார் வீட்டிற்குச் சென்றார்; சந்தித்தார். ஆசியும் பெற்றார்; போராட்டம் நடத்தும் அனுமதியையும் பெற்றார். மகாத்மா அவர்கள், போராட்டம் நடத்தும் வழிமுறைகளையும், அதற்கான அறிவுரைகளையும் கூறும்போது, வன்முறைகளற்ற வகையில் வெறுப்பை மட்டுமே உணர்த்தும் நிலையில் போராட்டத்தை நடத்துங்கள் என்றார். வெறுப்பை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று காமராஜ் அவர்களால் கேட்கப்பட்ட வினாவிற்கு 'பொது மக்கள் பார்த்து ஏளனம் செய்யும் நிலையில் நீல் சிலை மீது சிறு சிறு களிமண் உருண்டைகளை உருட்டிப் போட்டு நமது வெறுப்பைக் காட்டுங்கள்' என்று அடிகள் அறிவுரை கூறினார். இங்கிலாந்திலே இருந்து வருகின்ற சைமன் குழுவை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சி போராடவேண்டும் என்ற தீர்மானஅடிப்படையில், சைமனே திரும்பிப் போ என்று முழங்கும் போராட்டப் பணிகள், அப்போது விறுவிறுப்பாகவும், சுறுசுறுப்பாகவும் நடைபெற்று வந்தன. அதனால், நீலன்சிலைப்போராட்டம், நிறுத்தப்பட்டு, முழு கவனமும் சைமன் கமிஷன் எதிர்ப்பு மீதே திருப்பி விடப்பட்டது. இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் 43-வது மகாசபை தமிழ்நாட்டில் நடத்தும் முறை வந்ததால், அந்த மாநாடு 1927ஆம் ஆண்டு, சென்னை எழும்பூர் பகுதியிலே உள்ள ஏரிக்கரைத்திடலில் நடந்தது! டாக்டர்அன்சாரி, அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்றார்! தலைவர்காமராஜ், விருதுநகரிலே இருந்து சென்னை மாநாட்டிற்கு வந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாகக் கலந்து கொண்டு பணியாற்றினார்.