பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1.21 உலகச் சுற்றுப் பயணம் செய்துகொண்டிருந்த பண்டித ஜவகர்லால் நேரு, அவரது துணைவியார் கமலா நேரு, தங்கை விஜயலட்சுமி பண்டிட், மகள் சிறுமி இந்திரா உட்பட்ட அனைவரும், மார்சேல்ஸ் என்ற ஐரோப்பிய நகரத்திலேயிருந்து நேராகச் சென்னை வந்து மாநாட்டிலே கலந்து கொண்டு உரையாற்றினார்கள். இந்த மாநாடுதான், இந்தியாவிற்கு முழு சுதந்திரம், போர் ஆபத்து, முஸ்லிம் லீக்கோடு கலத்தல், என்ற முழக்கவுரைகளை எதிரொலித்தது! அந்தக் கருத்துக்களைத் தீர்மான வடிவங்களாக ஒரு மனதாக ஏற்று, நேரு அவர்கள் அம்மாநாட்டில் வீர விளக்கவுரை களை ஆற்றினார். ஒரு மனதாக சென்னை மாநாடு நேருவின் தீர்மானக் கருத்துக்களை ஏற்றதைக் கண்டு, நேரு அவர்களுக்கே சந்தேகம் ஏற்பட்டது. மாநாட்டிலே இருக்கும் பார்வையாளர்களும் - பிற தலைவர்களும் தமது தீர்மானக் கருத்துக்களை எப்படி ஏற்றார்கள்? ஒருவேளை, தீர்மானத்தின் உட்பொருளை அவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லையா? அல்லது தவறான பொருள் கொண்டு விட்டார்களா? என்பவைதான் அந்த சந்தேகம்! அதன் உண்மையை, பூரண சுயராஜ்ஜியம் என்ற தீர்மானம் ஏற்படுத்திய சூடான வாக்கு வாதங்களே உருவாக்கி விட்டது! அதற்கு இரண்டொரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் முழு சுயராஜ்ஜியம் தேவை என்ற இந்தியத் தேசியக் காங்கிரஸ் கட்சியின் அடக்கமுடியாத, உயிராற்றலான ஆசையாகவே மாறியது. காமராஜ் மாநாடும் நேரு சந்திப்பும்! மாநாடு முடிந்த பின்பு எஸ். சத்தியமூர்த்தி ஐயர் அவர்களும், காமராஜும் சென்று, பண்டித நேரு அவர்களைச் சந்தித்தனர். விருதுநகரில், இந்தியக் குடியரசுக் காங்கிரஸ் என்ற பெயரில் ஒரு மாநாட்டை நடத்திட நேருவிடம் அனுமதியும், அதில் அவரும் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஒப்பமும் காமராஜர் பெற்றார்: அந்த மாநாட்டை விருதுநகரில் சிறப்பாக நடத்தினார்காமராஜ். நீலன் சிலையை அகற்ற வேண்டும் என்ற பழைய தீர்மானக் கருத்தை இந்த மாநாட்டிலே மீண்டும் நேரு உயிர்ப்பித்துப் பேசினார்:பண்டித நேரு, காமராஜின் தேசிய உணர்வை மிகவாகப் பாராட்டினார். நீல் சிலையை அகற்றும் பிரச்சினையை நிறுத்தாதே - நடத்து, என்று கூறிகாமராஜ்நெஞ்சினை.அவர்கனலாக்கிவிட்டார்: