பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 தேசியத் தலைவர் காமராஜர் மாநாட்டிலே நிறைவேற்றப்பட்ட நீல்சிலை அகற்றல் என்ற தீர்மானத்தைக் கண்ட ஆங்கிலேயர் ஆட்சி, நீலன் சிலையை இரவோடு இரவாகயாருக்கும் தெரியாமல்ஒருநாள் அகற்றிவிட்டது! சென்னைப் பொருட்காட்சி சாலையில், 1937-ம் ஆண்டு அந்த நீலன் கல்வடிவப் பொம்மை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போதைய சென்னைசட்டசபையில் எப்படிஅகற்றலாம் நீலன் சிலையை? என்ற வினா மிகக் காரசாரமாக எழுந்தபோது எங்கள் சிலை அது எந்த இடத்திலும் நாங்கள் அதை வைப்போம்! என்று அப்போது சென்னையில் பிரதமராக இருந்த இராஜாஜி அவர்கள் சம்மட்டி அடிபோல் பதில் கொடுத்தார் நீலன் சிலை விவகாரம் இத்துடன் நின்றது: சைமனே திரும்பிப்போ? சர் ஜான் சைமன் குழு, 1928-ம் ஆண்டு இந்தியா வந்தது! ஏற்கெனவே திட்டமிட்டபடி சைமன் எதிர்ப்புணர்வு அப்போது இந்தியாவெங்கும் புதுப்புது சக்தியோடும், புதுப்புது சுறுசுறுப் போடும் துடித்தபடியே நிலவியது. ஆலைத் தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள், படித்த அறிஞர்கள், மாணவர்கள் இடையே எல்லாம் இந்தப் பரபரப்பு அரசியலுணர்வோடு காணப்பட்டது! அயோத்தி விவசாயிகள் சட்டம், குஜராத்திலே பர்டோலி சத்தியாக்கிரகம், பம்பாய் நிலவரி உயர்வுச் சட்டம், வாலிபர்களின் எழுச்சி மாநாடுகள் - இவையெல்லாம் அந்தந்த மாநிலத்திலே ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்க்கும் ரத.கஜ. துரக பதாதிகளாயின. இவற்றில் எல்லாம் மிகக் குறிப்பிடத்தக்க அரசியல் கிளர்ச்சிதான், சைமனே திரும்பிப்போ என்ற கிளர்ச்சி! இத்தகைய போராட்டங்களால் அப்போதைய இந்தியா மிகுந்த பரபரப்பும், சுறுசுறுப்புமாகச் சுழன்று கொண்டே இருந்தது: சைமனே திரும்பிப் போ என்ற கிளர்ச்சியில் காங்கிரஸ் மிதவாதிகளும்; அப்போது சேர்ந்துப்போராடலானார்கள் எந்த இடத்திற்கு சைமன் கமிஷன் சென்றாலும், சைமனே திரும்பிப்போ, என்ற ஆரவாரங்கள் கேட்டுக் கொண்டே இருந்தன. கறுப்புக் கொடிகள் வானளாவிய கார்மேகங்கள் போலக் காட்சி தந்தன எங்கும் நிறை நாத பிரம்மமாக எங்கும் எதிர்ப்புகள் எழவே, அது சைமன்துரைக்குக் கோபத் தீயைமூட்டி விட்டது. சைமனே திரும்பிப்போ என்ற சொற்கள் எதிரொலிக்கும் இடங்களிலே எல்லாம், சாத்தானின் அடக்குமுறைப் பலாத்காரம் பயம் காட்டியது!