பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1 23 اولیه அடக்குமுறை ஆர்ப்பரிப்பு இருந்தாலும், அஞ்சாத எதிர்ப்புச் சக்தி வெற்றி பெற்றபடியே அங்கங்கே நடத்து கொண்டிருந்தது: சைமன் கமிஷன் அடக்கு முறைகளை எதிர்த்து பஞ்சாபில் உள்ள லாகூரில், லாலா லஜபதிராப் அப்போது ஆயிரக் கணக்கான மக்களிடையே நின்று ஆரவார முழுக்கங்களை முழக்கிக் கொண்டிருந்தார்: ஆங்கிலேய இளைஞனான ஒரு காவல் துறை அதிகாரி, அப்போது இலஜபதிராய் மார்பிலே ஓங்கிச் சரமாரியாகக் குண்டாந்தடியால் அடித்துக் கொண்டே இருந்தான்! ஆனால், கூட்டம் எவ்விதப் பலாத்கார வன்முறைகளிலேயும் இறங்கவில்லை! லாலா அவர்கள் அறப்போர் வழியிலே நின்று காந்தியடிகளின் அகிம்சா தத்துவத்திற்கு இலக்கணமாக விளங்கினார். அடிபட்ட வீரர்கள் அனைவரும் காந்தீயத்திற்குரிய இலக்கியமாகத் திகழ்ந்தார்கள் லாலா மார்பிலே பலமான தடி அடிகள் விழுந்ததால், உடம்பெல்லாம் ஊமைக் காயங்கள் ஊடுருவின. சில நாட்களுக்குப் பின், பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராய் மாண்டார் என்ற எரிமலைச் செய்தி இந்திய பூமியெங்கும் வெடித்தது! மதுரை நகரிலே சைமன் எதிர்ப்பு! அதே சைமன் கமிஷன்தான், பாஞ்சால சிங்கம் லாலா லஜபதி ராயைப் பினமாக்கிய சைமன் கமிஷன் தான், தமிழ்நாட்டிலே வலம் வரமதுரை மாநகர்வந்தது எதிர்ப்புகளையே வரவேற்பாகப் பெற்ற சைமன் குழுவுக்கு; மதுரையில் வரவேற்பு வழங்கிட திருமலை நாயக்கர்மஹாலிலே அரசு ஆதரவாளர்கள் கூடினார்கள்! காங்கிரஸ் செயல் வீர அரிமாக்கள், அணியணிகளாகக் கைகளிலே கறுப்புக் கொடிகளை ஏந்தி, சைமனே திரும்பிப் போ, என்ற முழக்கங்களோடு, மகாலை நோக்கி நடந்தது விநாடிக்கு விநாடி, மோதல் இதோ, அதோ மோதல் என்ற குரல்கள் எதிரொலித்தன; கூட்டத்து மக்கள் உச்சக் கட்ட உணர்ச்சியிலே குவித்தார்கள்: இத்தகைய போராட்ட ஆர்ப்பட்ட ஆழியின் உணர்வலை களுக்கு இடையேதான், மூவண்ணக் கொடி, பறக்கும் மோட்டார் கார் ஒன்று மஹால் முன்பு வந்து நின்றது!