பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 24. தேசியத் தலைவர் காமராஜர் பாண்டிய நாட்டுச் சிங்கம் காமராஜ் வாழ்க! மாவீரர் காமராஜ் வாழ்க மகாத்மா காந்திக்கு ஜே சைமனே திரும்பிப் போ என்ற முழக்கங்களோடு முத்தமிழ்த் தொண்டர்கள் புடைசூழ, முத்தொள்ளாயிரமன்னனைப் போலவந்து இறங்கினார்காமராஜ்! போராட்டக் களத்தில் மாவீரன் காமராஜ்! மகாத்மா காந்திக்கு ஜே சைமனே திரும்பிப் போ! என்ற முழக்கங்கள் வானைப்பிளந்தன; ஆரவாரமின்னல்கள் ஒளியுணர்வு களோடு பளிச்சிட்டன மாவீரர் காமராஜைப் பின்பற்றி, மாபெரும் தேசபக்தர் ஜார்ஜ் ஜோசப் அவர்களும்... காரிலே கம்பீரமாக அங்கே வந்து சேர்ந்தார்! காமராஜ் அவர்களைக் கண்ட மதுரை மாநகர் மக்கள், பெருத்த ஆர்ப்பாட்டமிட்டார்கள் உடனே, தனுஷ்கோடிஇங்கேவா" என்று தனது நண்பரை அழைத்தார் கையிலே கருப்புக்கொடியை அவரிடம் கொடுத்தார் 'என் பின்னாலே வா' என்று கட்டளையிட்டார் . காமராஜர் தளபதி காமராஜூம், ஜோசப்பும் முன்னே போக, அவருடைய நண்பர்களும் தொண்டர்களும் மறவர்களாக அணிவகுக்க உணர்ச்சி பெற்ற மதுரை மாவட்டப் பொதுமக்கள், இராணுவம் போல பின்னே நடைபோட்டார்கள் சைமனே திரும்பிப்போ என்ற ஓங்கார ஒலிகள். ஆங்காங்கே ஆலய உள்ளொலிக் கற்களின் இசையோடு மோதி மோதி, பொங்கு மாங்கடலலைகளைப் போல எதிரொலித்தன. பாண்டியனின் புறப்பாட்டுப் பறை முழக்கங்களொப்ப, சைமன் எதிர்ப்புப் போர் முழக்க ஒலிகளோடு வீறு நடையிட்டவாறே காங்கிரஸ் தொண்டரேறுகள் மகால் மண்டபம் முன்பு அணி வகுத்தனர்! காங்கிரஸ் தொண்டர்களின் போராட்டக் கடுமைகள் தான் கணற்கற்களாக அனல் பறந்தனவே தவிர, பரங்கியர் காவல்துறை ஏதும் எதிரார்ப்பாட்டம் செய்யாமல், என்ன - நடக்கிறதெனத் திரும்பியும் பாராமல், காக்கிச் சட்டைகளை மாட்டிய சோளக்கொல்லைப் பொம்மைகளைப் போல, பனிப்போர் காட்சிகளாகவே காவலில் காணப்பட்டனர்! தடியடிதர்பார் ஆரவாரங்கள் இல்லை! ஆனால், லஜபதிராயைப் பிணமாக்கிய தன்மான ரோஷங்கள், அங்கே கோஷங்களாகக் கேட்டன!