பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1 25 வன்முறைகளேதும் நடந்திட வழிகாட்டவில்லை காவல்துறை காரணம் 22 காவலாளர்களைச் செளரி செளராவில் உயிரோடு எரித்த அச்சம் - அங்கே, கண்ணாடியின் பிம்பங்களாக ஆடிச் சுழன்று கொண்டே இருந்தன. சைமனே திரும்பிப் போ என்ற இடிமுழக்கங்கள்; கூடல் நகரின் வீதிகளிலே எல்லாம், மக்கள் கூடி ஒலித்தபடியே நின்றனர். எதிர்பார்த்த ஆங்கிலேய அராஜகம் ஏதும் அங்கே நடக்கவில்லை! நடந்தது என்னமோஒன்றே ஒன்றுதான் என்னஅது? கறுப்புக்கொடி கடல் அங்கே எதிர்ப்பு அலைமுழக்கங்களை எழுப்பிக் காட்சியளித்ததோடு, மாவீரர் காமராஜ், தொண்டரணி ஏறு ஜார்ஜ் ஜோசப் எழுப்பிய மெக்கபோன் முழக்கங்களான - சைமனே திரும்பிப் போ’ என்ற அலை மோதல்கள்தான் அது! 1929-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி களபலியானது - பாரதக் கதை அரவானைப் போல! அதனால் விளைந்த நன்மை என்ன? கன்சர்வேடிவ் ஆணவம் கல்லறைக்குள் ஆமைபோல் குடியேறியது. தொழிற்கட்சி அந்த சமாதியின் மேலேறி நின்றது! இங்கே இந்தியாவில் கறுப்புக் கொடி காட்டிய காங்கிரஸ் தொண்டர்கள் கடும் கொடுமைகளுக் காளாவதையும், சிறைக் கைதிகள் சித்ரவதை செய்யப்படுவதையும் கண்டித்து; ஜதீந்திரநாத் தாஸ் என்பவர் உண்ணாவிரதம் இருந்தார். துக்கு மேடையை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங் அவர்களுடன் இந்த தாஸ் ஒன்றாகச் சிறையில் இருந்தவர் ஆகஸ்டு மாதத்தில் தாஸ் நோன்பை ஆரம்பித்தார். இன்று போல அன்று அரசியல் அவமானச் சின்னமான உண்ணும் போர்கள் எல்லாம் இல்லை! அரசியலைக் கொச்சைப்படுத்தும் அகிம்சா அறமுமல்ல அது! அறுபது நாட்கள் தாஸ் உண்ணாமலே அறநோன்பு இருந்தார் இறுதியாக அறுபத்தோராம் நாள் அவர் மாண்டார்: தேசத்திற்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் தவறாத வாலிபர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் பெருகிவந்ததற்குக் காரணம், தேசபக்தியே! தாஸ் போன்றவர்களின் உயர்த்தியாகமே! ஜதீந்திர நாத் தாஸ் தியாக மனப்பான்மை, வாலிபராக இருந்த காமராஜ் அவர்களின் நெஞ்சிலே ஆழப் பதிந்தது நாட்டிற்காகத் தன் உயிரையும் பலி கொடுக்க அவர் தயாரானார்: