பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 தேசியத் தலைவர் காமராஜர் காமராஜர் பங்கேற்ற உப்புப் போர்: அண்ணல் காந்தியடிகளின் உப்புப் போர் ஆங்கிலேயர் ஆதிபத்தியத்தின் விலா எலும்புகளை ஒடித்த போராக மதிக்கப்பட்டது. உப்புச்சத்தியாக்கிரகப்போரை ஆரம்பிக்க மகாத்மா மக்களுக்கு அழைப்பு விடுத்தார் உப்பு: உப்பு என்ற பேச்சே நாடெங்கும் பேச்சாக இருந்தது! உப்புச் சத்தியாக்கிரகம், ஓர் ஆயுதமாக விளங்கும் விடுதலைப் போருக்கு என்பதை, எவரும் அப்போது ஆரம்பத்தில் எண்ணவில்லை; இந்த உப்புப் போர்தான்; சுதந்திரம் என்ற சுவைக் குரிய உப்பாக உருவாயிற்று என்பது - போகப் போகத்தான் மக்களுக்குத் தெரிந்தது! அகில இந்திய தேசிய காங்கிரஸ்கட்சியை உருவாக்கிட 1884-ஆம் ஆண்டில் முயற்சித்த ஆலன் அக்டேவியன் ஹியூம் என்ற ஆங்கிலேயர், அன்று படித்த பட்டதாரிகளுக்கு ஒர் அழைப்பை விடுத்தார்: அந்த அழைப்பிலே கல்கத்தா பல்கலைக் கழகத்தில் படிக்கும் பட்டதாரி மாணவர்களைப் பார்த்து, நீங்கள் இந்திய முன்னேற்றத்திற்குரிய உப்பாக இருக்க வாருங்கள்! என்று கூறி அழைத்தார்: அன்று அவர் அழைத்த அழைப்பின் போது குறிப்பிட்ட அதே உப்புதான், ஆங்கிலேயரைஎதிர்க்கும் உப்புச்சத்தியாக்கிரகப் போராக மாறிவிட்டது என்றால், அது என்ன அற்புதம் பார்த்தீர்களா அந்த உப்புதான், இந்திய சுதந்திரத்திற்குரிய ஒர் ஆயுதப் போராக மக்களிடம் ஊடுருவி, உப்புப் போராக உருவெடுத்தது! இது மகாத்மா செய்த அரசியல் அற்புதங்களிலே ஒன்று இந்தியாவிலே உற்பத்தியாகும் உப்பு:மீது ஆங்கிலேயர் விதித்த வரியை எதிர்த்துத்தகர்த்தெறிய வேண்டும் என்று-அன்று அண்ணல் காந்தியடிகள் அறிவித்தார்: உப்பு:மீது விதிக்கப்பட்ட வரிச் சட்டங்களை உடைத்து, ஆங்கிலேய ஆதிக்கத்தின் ஆணவ ஆட்சியை எதிர்ப்பதற்கு ஈடு அதுதான் என்று மக்களுக்குணர்த்தவே, உப்புப்போர் நடைபெற்றது! தேசியப் போராட்டத்திற்கும் - உப்புக்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி, அரசியல்வாதிகளிடையேயும் சரி, மக்கள் மன்றங்களிலேயும் சரி பெரியதோர்வியப்பானவினாவை எழுப்பிக் கொண்டிருந்தது!