பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 127 உப்புப்போராட்டம்அண்ணல்திருவாயால்உரைக்கப்பட்டதுதான் தாமதம், நாட்டின் விலைவாசிகள் எல்லாம் மளமளவெனக் குறைந்தன. இதனால், விவசாயக் குடிமக்களும் ஏழைக் குடியான வர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் குதூகலமடைந்தார்கள்! போராட்டத்தின் எழுச்சி, ஊற்று மடை திறந்து விட்டது போலாயிற்று நாடு முழுவதும் நகரங்கள், கிராமங்கள் முழுவதும் உப்பு செய்யும் அரசியல் அற்புதங்களைப் பற்றியே தினசரிப் பேச்சாக இருந்தது! உப்புச்சத்தியாக்கிரமென அறிவித்ததால், நாளுக்கு நாள்நாட்டில் போராட்ட உற்சாகம் அதிகரித்ததே தவிர, அச்சமோ, பயமோ மக்களுக்கு உருவாகாமல், மக்கட் பலம் பெருகியே உந்தியது. காமராஜர் பெற்ற சிறைவாசம்: எனவே, இதைக் கண்ணாரக் கண்ட காந்தி அடிகள், உப்புச் சட்டத்தை உடைத்தெறியும் சம்மட்டி நாள், ஏப்ரல் 6 என அறிவித்தார் தண்டிகடற்கரைதான்களம் என்றார். அன்று சென்றார் அங்கே உப்புச் சட்டத்தை உடைத்தெறிந்தார் சட்ட மறுப்பு பாரதமெங்கும் வெற்றிகரமாக நடந்தது! தமிழகத்தின் உப்புப் போர்க்களம் வேதாரண்யம் சட்டத்தை இங்கே ராஜாஜி உடைத்தார். இந்தியாவில் வெள்ளையராட்சியை எதிர்த்து உருவான உப்புச் சட்ட உடைப்புப் போரைக் கேட்டு, உலகமெங்கம் ஓர்அதிசய பரபரப்பு உருவாயிற்று:ஆயிரக்கணக்கான மக்கள் அணிவகுக்க, அவர்களிடையே உப்பு வரி ஒழிக, உப்பு வரி ஒழிக. என்ற முழக்கங்களை எழுப்பியவாறே தளபதின்மராஜ் அணி வகுத்தார்; அவர் பின்னாலே காங்கிரஸ் தொண்டர் படைகள் புடை சூழந்து வீரநடை போட்டு வந்தன! காவல்துறை இதையெல்லாம் வேடிக்கை பார்க்குமா என்ன? கைது செய்தது காமராஜ் அவர்களையும் - பிற தொண்டர் படைகளையும் சிறைகட்டறையில்போராட்டவீரர்கள் அடைக்கப் பட்டார்கள்: காமராஜுடன் கைது செய்யப்பட்ட நண்பர்கள் அணியுடன், அவர் வழக்கு மன்றம் வந்தார் நாட்டின் சுதந்திரத்திற்காக, உப்புச் சத்தியாக்கிரகம் செய்தேன் என்றார் நீதிமன்றத்தில் - காமராஜர்! இரண்டாண்டுகள் சிறைவாசம் என்ற தண்டனையை அவருக்குத் தந்தது வழக்குமன்றம்! மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்றார்! காமராஜருடன் பங்கேற்றப் போராட்டத் தொண்டர்களுக்கும், அதே தண்டனையை வழங்கினார் நீதிபதி!