பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தேசியத் தலைவர் காமராஜர் காமராஜ் என்ற கர்ம வீரர், நாட்டு விடுதலைக்காக, முதன் முதலாக உப்புப் போரிலே ஈடுபட்டார். அதற்காக இரண்டாண்டு சிறைத் தண்டனை பெற்றதும் இது தான் முதல் தடவை அவர் அனுபவித்த சிறை வாசமும் இதுதான்முதல் முறை! தலைவர்காமராஜ் அவர்களை, அலிபுரம் சிறையிலே அடைத்தது ஆங்கில ஆட்சி! அப்போது, புது மணமகனாக இருந்த கே.எஸ். முத்துசாமியின்தாயாரும், காமராஜ் அவர்களின் அன்னையாருமான சிவகாமி அம்மையாரும் நீதி மன்றம் கொடுத்தத் தீர்ப்பைக் கேட்டு ஆராத்துயருற்றார்கள்! பரோலில் வெளிவர காமராஜ் மறுப்பு: அலிபுரம் சிறைக்குச் சென்று, தலைவர் காமராஜுடைய பாட்டி பார்வதி அம்மையாரின் உடல்நிலையின் சீர்குலைவை அறிவித்து, அவரை பரோலில் வந்து போகுமாறு நண்பர்கள் முருக, தனுஷ்கோடி போன்ற மிக நெருங்கியவர்கள் எல்லாம் சிறையில் நேரில் கண்டு கூறியும், காமராஜ் வெளியே வர மறுத்து விட்டார். இதற்கிடையில், காந்தி - இர்வின் ஒப்பந்தம், 1931ஆம் ஆண்டு நடந்தது! அந்த உடன்படிக்கைக்கு ஏற்ப அரசியல் போராட்டக் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தது பிரிட்டிஷ் ஆட்சி! பாரதமெங்கும் கைது செய்யப்பட்ட உப்பு சத்தியாக்கிரகப் போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்! கர்ம வீரர் காமராசரும், மற்ற காங்கிரஸ் தொண்டர்களும் தமிழகத்தில் விடுதலை செய்யப்பட்டார்கள்: - இரண்டு வகை போர் முறை: எந்த எதிர்கட்சியாக இருந்தாலும் சரி, ஒர் அதிகாரச் செருக்குடைய ஆட்சியை எதிர்க்கும் போது, அவர்கள் இரண்டுவகைப் பட்டவர்களாகவே இருப்பார்கள்! தனது கட்சி வளர, தான் முன்னின்று சிறை செல்பவர்கள் ஒரு ரகம் மறு ரகம், சிறை சென்ற தொண்டர்களின் பின்னாலேயிருந்து கொண்டு, சிறை சென்ற தொண்டர்களையும் வளர்த்துக் கொண்டே, தனது கட்சியையும் வலுப்படுத்துகின்ற இலட்சிய நோக்கமுடையவர்கள்! காமராஜ் அவர்கள் இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த கர்மவீரர்! ஆனால், அவரைத்தான் ஆங்கிலேயர் ஆட்சி எதற்கெடுத்தாலும் முதலிலேயே கைது செய்து விடுவார்கள்!