பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி.கலைமணி * 23 பிரிட்டிஷ் ஆட்சி என்ன? எந்த எதேச்சாதிகாரமும் அப்படித்தானே சர்வாதிகார ஏணியிலே ஏறும் அதனைப் போல, எல்லாப் போராட்டங்களிலும் முதலில் அவர் கைதாவது மட்டுமல்ல - அவருடன் பழகுபவர்களையும் செல்பவர்களையும் காவல்துறை அவசரப்பட்டு முதலிலேயே கைது செய்துவிடும்! விருதுநகரில் விழா வரவேற்பு அலிபுரம் காராக்கிருகத்திலே இருந்து காமராஜ் சிறை மீண்டு விருதுநகர் வந்தார் ரயில் நிலையத்திலே காமராஜ் அவர்களை வரவேற்றிட, மக்கள் அணை உடைந்த வெள்ளமாயினர்; மலர்மாலைகளைச் சூட்டினார்கள் காமராஜுக்கு தலைவர் காமராஜர் வாழ்க என்ற முழக்கத்தை எழுப்பியவாறே, அவரைத் தோளிலே சுமந்து ஆரவார வீர நடையோடு வந்தார்கள்! ஒரேபரபரப்பு விருதுநகர்வீதிகளில் எல்லாம்! எங்கு பார்த்தாலும் மூவண்ணத் தோரணங்கள் காந்தியடிகள் படம் ஊர்வலத்தில்! காமராஜைக் கண்ட மக்கள் ஒரே பரபரப்பானார்கள்! கோயில், தெப் பக்குளம், கடைவீதி, பேருந்து நிலையம் போன்ற இடங்களிலே எல்லாம் மக்கள் தேங்கிக் தேங்கி நின்று எதையோ எதிர்பார்த்து ஏக்கமாக நின்றார்கள் திருவிழாக் கோலமாகக் காட்சி தந்தது விருதுநகர்! தலைவர் காமராஜ் ஊர்வலமாக அழைத்து வரப் பட்டார்! பட்டாளத்து வீரர்கள் வரும் பவனிபோல காங்கிரஸ் தொண்டர்கள் வந்தே மாதரம் என்ற பாடலைப் பாடி ஒருவர் பின் ஒருவராக அல்ல, நால்வராக நடந்து வந்தார்கள்! விருதுநகர் பேரூர் அன்றுவரை காணாத விநோதமாக விளங்கியது காமராஜ் பவனி! அன்றுவரை விருதுநகர் வரலாற்றில் இப்படியொரு தேசியத் திருவிழா ஒரு சொந்த ஊர் விழா போல நடைபெற்றதே இல்லையாம்! தலைவர் காமராஜ் அவர்கள் தனது இல்லம் அருகே இருந்த அம்மன் கோயில் மேடையிலே ஏறி நின்று, அணிவிக்கப்பட்ட மலர்மாலைத் தோற்றத்தோடு, அன்று அவர் ஆற்றிய எளிய ஏழ்மை உரையின் சுருக்கம் இதோ: "நான் உங்களின் ஒருவன் சாதாரணத் தொண்டன் எனக்கு இவ்வளவு பெரிய வரவேற் பையும் - வாழ்த்தையும் கொடுத் தீர்கள் உங்களுடைய அன்புக்கு என்னுடைய நன்றி! நீங்கள் அனைவரும் எனக்காக ஒன்று செய்யவேண்டும். கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும் உங்களுடைய மகத்தான சிறந்த