பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 தேசியத் தலைவர் காமராஜர் அன்பினால் எனக்குத்தலைக்கணம் வந்துவிடக்கூடாது என்று நீங்கள் கடவுளைக் கும்பிட வேண்டுகிறேன்” தலைவர் காமராஜ். சிறை, மீண்டவரவேற்புவிழாவிலே ஆற்றிய உரைசுருக்கமாக, எளிமையாக அமைந்தாலும், அது ஒரு தேசபக்த வீரன் எவ்வளவு அடக்கமாகவும், அன்பாகவும், அதைக் கேட்கும் மக்களைத் தேசபக்திக்கு எப்படியெல்லாம் ஈர்க்க முடியுமோ, அப்படிப்பட்ட தன்மையிலே உணர்ச்சிப் பெருக்கோடு அமைந்திருந்தது! அன்று மட்டுமல்ல, அவர் அரசியல் உலகில் அசைக்க முடியாத ஹெர்குலிசாக, சாம்சனாக இருந்தபோது, மக்கள் அவர் பக்கமே இருந்தார்கள் என்றால், காரணம் அவருக்குள்ள பல தகுதிகளிலே எளிமையாக, உண்மையாக, மக்கள் மொழியிலேயே பேசிய பேச்சுக்களுமே தமிழ்நாட்டு அரசியலானாலும் சரி, அகில இந்திய அரசியலானாலும் சரி, அவர் எப்போது, எங்கே பேசினாலும், மிக ரத்னச்சுருக்கமாகப் பேசும் வழக்கத்தையே மேற்கொண்டார். அலங்காரமாகப் பேச வேண்டும், அழகாகப் பேச வேண்டும். அற்புதமாகப் பேச வேண்டும். அழகு தமிழ் மொழிச் சொற்களோடு பேச வேண்டும், எதுகை மோனைகளோடு பேச வேண்டும், உவமைகளோடு பேசவேண்டும், ஆங்காரமாகப் பேச வேண்டும், அகங்காரமாகப் பேசவேண்டும், நீண்ட நேரம் பேச வேண்டும், எல்லோரையும் தோற்கடிக்கும் முறையில் பேச வேண்டும் என்றெல்லாம் எண்ணிப் பேசும் பண்பு காமராஜருக்கு சாகும் வரை இருந்ததில்லை. கிராமத்து மக்கள் எப்படி ஒருவருக்கொருவர் நேர்முகமாகப் பேசுவார்களோ அப்படிப் பேசுவார் எல்லோருக்கும் புரியும்படி பேசுவார் எதைச் சொல்ல வேண்டுமோ அதையே பேசுவார்! அவை நடுக்கம் இல்லாமல் பேசுவார். சாதாரண நகர் மக்களைப் போலவே பேசுவார். அது தான், அவரது பேச்சின் சிறப்பாக அமைந்தது! அலிபுரம் சிறையினின்றும் காமராஜ் அவர்கள் திரும்பி வந்ததும், தனது பாட்டி பார்வதியம்மாளைப் பார்த்தார்; அந்த அம்மையார் பிறகு இரண்டொரு நாட்களில் காலமானார்: பாட்டியம்மாளுக்கான இறுதிப் பயணச் சடங்குகளைக் காமராஜ் திரும்பி வந்துதான் செய்யும் நிலையேற்பட்டது! அந்த அம்மையார் மறைந்த பின்பு தான்; தனது துண்டை மடித்துத் தோளில் அணியும் புதுப்பழக்கம் அவருக்கு உருவானது! அதுதான் பாட்டியின் நினைவணியோ என்று நினைக்குமளவிற்கு, அவருடைய கடைசிநாள் வரைத் தொடர்ந்து அதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார்!