பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசான் சத்தியமூர்த் ாவர் காமராஜர்! தமிழ்மொழியின் பெருமை இன்று தரணியெல்லாம் பாராட்டப் படுகின்றது என்றால், அந்தத் புகழ் மதுரை மாநகருக்கு மட்டுமே உண்டு! கபாடபுரமும், தென்மதுரையும் முதல் இடைச்சங்கங்களை வளர்த்த பெருமை பெற்ற புனிதத் தலங்களாக அன்று திகழ்ந்தன! இன்றைய மதுரையிலே அன்று கடைச்சங்கம் வளர்ந்த பாங்கினால் தான், தமிழரின் புகழ் உலகெங்கும் பேசப்படும் பெருமையைப் பெற்றது! தாமரைமலர் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ள மதுரை மாநகருக்கு, ஆலவாய், கூடல் மாநகர் என்றும் வேறு சில பெயர்கள் உள்ளன! இந்த மதுரை மாநகரின் முத்திரையாக இலக்கிய உலகில் பவனி வரும் சிலப்பதிகாரம் என்ற முத்தமிழ்க் காப்பியம், வழி வழி வந்த தமிழ் இனத்தின் பண்பாடுகளை, நாகரிக வாழ்க்கைகளை, கலை உலக வரலாறுகளை எதிரொலித்திடும் காலக் கண்ணாடியாக இன்றும் இயங்கி வருகிறது. சமண மதப் பேரறிஞரான வச்ரநந்தி என்பார், நான்காவது தமிழ்ச் சங்கத்தை கி.பி. 470 ஆம் ஆண்டில் தோற்றுவித்ததும் இதே மதுரை மாநகரில் தான் இராமநாதபுரம் மன்னர்பிரான் பாஸ்கர சேதுபதி அவர்கள், ஐந்தாம் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி, இன்றும் அது இயங்கிக் கொண்டிருப்பதும் இதே மதுரை மாநகரில்தான்! பாமரமக்கள்பாராளும்காலம் என்றால் கவிஞர்.இக்பால். அவரது வாக்குக்கேற்ப, ஆங்கிலேய எஜமானர்கள் ஆட்சியை எதிர்த்து, இந்தியப் பாமர மக்கள் தங்களுடைய மறுமலர்ச்சி வாழ்க்கைக்காகப் போராடி வரும் இந்தியப் பகுதிகளிலே ஒன்று மதுரை மாநகரம்!