பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 32 தேசியத் தலைவர் காமராஜர் மதுரை மாநாடு; இராஜாஜி எதிர்ப்பு 1931-ஆம் ஆண்டில் அதே மதுரை மாநகரிலே, தமிழ் நாடு காங்கிரஸ் கட்சி மாநாடு நடைபெற எல்லா ஏற்பாடுகளும் நடந்து வந்தன. அகில இந்திய தேசியக்காங்கிரஸ்கட்சியில் ஏற்பட்ட பிளவு அணிகளைப் போல, தமிழ்நாட்டிலும் இரு அணிகள் காங்கிரஸ் கட்சியைப் பிளவுபடுத்திக் கொண்டிருந்தன. ஒன்று எஸ். சத்தியமூர்த்தி ஐயர் அணி மற்றொன்று இராஜகோபாலாசாரியார் அணி இரண்டு அணித் தலைவர்களும் பிராமணர்கள் தான் யார் கை மேலோங்கினால் அவரவர் அரசியல் பலம் உயரும் என்ற பதவிப் போட்டியே அவர்களுக்குக் காரணமாக இருந்தது; சத்தியமூர்த்தி அணி, ஏழை நடுத்தர மக்கள் அணி! இராஜாஜி அணியில், கதர்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கதர் துணிகளை விற்பவர்களும், அதன் கடைக்காரர்களும் இருந்தார்கள். இராஜாஜி கோஷ்டியினர், செல்வாக்கும் செல்வமும் படைத்தவர்கள் காங்கிரஸ் கட்சியினுள்ளே எவ்வித மாறுதலும் புகக் கூடாது என்ற கொள்கையுடையவர்கள் சத்தியமூர்த்தி அணியில், நடுத்தர மக்கள், ஏழைகள் அன்றாடம் உழைத்து உண்பவர்களைப் போன்றவர்கள் மட்டுமே சூழ்ந்திருந்தார்கள். வேறு எந்தவிதச் செல்வாக்கும் இந்த அணிக்குக் கிடையாது. வளர்ந்து வரும் ஒரு கட்சியிலே பணம் படைத்தவர்கள் ஓரணியாகக்கூடிக்குலாவுவது அப்படி ஒன்றும் விந்தைக்குரியதல்ல; பணம் படைத்தவர்கள், பணக்காரர்களோடு நட்பாடுவதும், பதவிகளைப் பணப் பெருமைகளினால் பெறுவதும், ஏழை - அன்றாடம் சோற்றுக்கு உழைப்பவனோடு சேருவதும், பொருளாதாரக் கோலாகலக் கூத்துக்கள்தானே! எனவே, திரு. சத்தியமூர்த்தி, ஏழைகள் அணிக்குள் நட்பாக தடமாடினார் என்றால், பணக்காரர்களோடு தானே பதவிப் பித்தர்களும் நடமாடுவார்கள்? அன்றைய காங்கிரஸ் கட்சியிலே, செல்வர்கள் கூட்டம், செல்வாக்குள்ளவர்கள் கூட்டம், இரண்டுமே இல்லாதவர்கள் கூட்டம் என்ற மேடு பள்ளங்கள் நடமாடின காமராஜ் - இராஜாஜி ஆரம்ப மோதல்! இராஜாஜி அவர்களுக்கு காங்கிரஸ் மேலிடத்தில் நல்ல செல்வாக்கு இருந்தது மட்டுமன்று: 'காந்தியடிகள் மனசாட்சியின் திறவுகோல் என்ற பெருமையும் புகழும் இருந்தன!