பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 133 அதனால், அவருக்குத் தமிழக அரசியலில் மற்றொருவரைக் காட்டிலும் அபரிமிதமான பெருமையும் செல்வாக்கும் இருந்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை! அதை மேலும் பெருக்குவது எப்படி என்பதிலே மட்டும் அவர் மிகத் தீவிரமாகக் கவனம் செலுத்திச் செயலாற்றினார்! பணமில்லாதவர்கூட்டம் என்ற பெயரோடு, சத்தியமூர்த்தி அணி தமிழகத்தின் அரசியலில் ஒரம் கட்டப்பட்டிருந்த காட்சியைக் காமராஜர் கண்டார். அவரும் ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்தானே - அதனால்: ஏழை - பணக்காரர், செல்வாக்குடையவர் அற்றவர், என்ற பேதங்கள், நாட்டின் விடுதலைக்காகப் போராடி வரும் ஒரு கட்சியிலே இருக்கலாமா? என்ற கேள்வியை காமராஜர் கேட்டார்: திரு. சத்தியமூர்த்தி அவர்களைப் பொருளாதாரக்கண்ணோட்டத் தோடு பார்ப்பது போலவே, அவரது அரசியலையும், தியாகத்தை யும், நாவன்மையினையும் கணக்கிட்டார்கள்! அதனால், அவரது அரசியல் உழைப்புக் கேற்ற தகுதியைத் தர மறுத்தார்கள் ராஜாஜி அணியாளர்கள்! இது அநியாயம்; அக்ரமம், நீண்டநாட்கள் நீடிக்காது! ஏழை மகன் ஒருவன் தனது கட்சி அரசியலிலே எவ்வாறு உழைக்கின்றான் - உழல்கின்றான் என்று எண்ணிப்பார்க்க வேண்டுமே தவிர, ஏகடியம் பேசிக் கொண்டு, ஏளனமாகப் பார்த்துக் கொண்டு, மேனாமினுக்கி அரசியல் நடத்துபவர்களே அரசியல் பலமுடையவர்கள்; அரசியல் ஏஜமானர்கள் என்று எண்ணிக் கொண்டு அரசியல் நடத்தக் கூடாது என்பது காமராஜ் அவர்களின் அரசியல் கோட்பாடு! அதனால், காமராஜ் அவர்கள், அந்த மேடு பள்ள அரசியல் செல்வாக்குள்ளவர்களோடு போர்க்கோலம் பூண்டிடும் கட்டாய நிலையை, உட்கட்சியை, எதிர் கோஷ்டியே உருவாக்கி வருவதைத் தள்ளவும் முடியாமல் தவிர்க்கவும் இயலாமல், எஸ். சத்தியமூர்த்தி ஐயருக்குரிய ஆதரவைத் திரட்டினார்: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தலைவராக இருந்தவர்டிசத்தியமூர்த்தி ஐயர் அவர்கள் அதனால், மதுரையிலே நடைபெறப்போகும் மாநாட்டிற்கு அவர் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார்: இராஜாஜி அணியினர் இந்த ஊர்வலத்தை எதிர்த்தனர்! பவனியில் கலந்து கொள்ளாமல் அவர்கள் தனியாகவே ஒதுங்கி விட்டார்கள்! ஏன், அப்படி ஒரம் கட்டினார்கள் ஒரே கட்சி ஊர்வலத்தை?