பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 34 தேசியத் தலைவர் காமராஜர் பொது மக்களிடையே செல்வாக்குப் பெற்று வளர்ந்து வரும் கட்சியிலே, குறிப்பாக ஓர் ஆண்டுவிழா மாநாட்டிலே அதுவும் ஒரு மாநிலத்திற்குரிய தலைவரைத் தேர்ந்தெடுக்கப் போகும் கட்சித் தேர்தலிலே, தனிப்பட்ட முறையிலே -நமக்குள்ளிருக்கும் போட்டி பொறாமைகளை இப்படி வெளிப்படையாகக்காட்டிக் கொள்வதா? என்ற ஆத்திரம், கட்சிக் கோபம் சத்தியமூர்த்தி அணிக்கு உருவாயிற்று. ஊர்வலம் முடிந்த பின்பு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தல் நடைபெறத் தொடங்கியது தேர்தலில் போட்டி பலமாக உருப்பெற்றது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத நிலையாக இருந்தது! திரு. வி. கலியாணசுந்தர முதலியார், டாக்டர் பி. வரதராஜலு நாயுடு, பெரியார் ஈ.வெ.ராமசாமி, எஸ். சீனிவாசஐயங்கார் உட்பட வேறு சிலரும்கட்சித் தேர்தல்கூட்டத்தை விட்டு விலகி, வெளியேறி விட்டார்கள். வாக்கு நாணயமற்ற அரசியல் தன்நலம்! இரண்டு அணிகளையும் சமாதானப்படுத்தும் சூழ்நிலையில், இராஜாஜியைத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், துணைத் தலைவராக எஸ். சத்தியமூர்த்தி ஐயரையும் தேர்ந்தெடுப்பது என்ற முடிவு, கட்சியில் உருவானது! இராஜாஜி அணி இதற்குச் சம்மதம் தெரிவித்ததால், இராஜாஜி தலைவரானார்.துணைத்தலைவர்தேர்தலுக்குசத்தியமூர்த்தி ஐயரின் பெயர் முன்மொழியப்பட்டது. கட்சியில் ஏற்கனவே சமாதான முறையில் பேசிமுடித்து ஒப்புக் கொள்ளப்பட்ட பதவி துணைத்தலைவர். அதை எதிர்த்தது ராஜாஜி அணி கட்சியின் முடிவுப்படி துணைத்தலைவர் தேர்தலை இந்த அணி நடத்த விடவில்லை! தங்களுடைய அணித் தலைவர் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சியால்; துணைத் தலைவர் பதவிக்காக முன் மொழியப்பட்ட சத்தியமூர்த்தி ஐயர் பெயரை எதிர்த்தார்கள் அவர்கள் சர்தார் வேதரத்தினம் பெயரைத் திடீரென முன்மொழிந்தது ராஜாஜி அணி தலைவர் தேர்தலில் எதிர் பாராத பரபரப்புச் சூழ்நிலை முன்பு சமாதானம் செய்தவர்கள் எடுத்த முடிவுப்படி நடக்காததால் - எதிர் அணியினர் ஆத்திரமடைந்தனர். அதனால் கலவரம் ஏற்பட்டது: