பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 135 துணைத் தலைவர் தேர்தலில் இவ்வாறு திடீர் திருப்பத்தை ராஜாஜி அணி உருவாக்கியதைக் கண்ட சத்தியமூர்த்தி ஐயர் அணியினர், திடீரெனத் திருவண்ணாமலை திரு. அண்ணாமலைப் பிள்ளையின் பெயரை முன் மொழிந்தார்கள் உடனே இராஜாஜி குழுவினர் முன் பின் யோசித்து, மீண்டும் சத்தியமூர்த்தி அணியிடம் சமாதானம் பேசலானார்கள் மறுபடியும் திரு. சத்தியமூர்த்தி ஐயரையே துணைத் தலைவராகத் தேர்வு செய்ய ராஜாஜி அணியினர் ஒப்புக் கொண்டு, வாக்களித்தார்கள். துணைத் தலைவராகத் திரு. சத்தியமூர்த்தி ஐயர் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தும் கூட, அவரது அணிக்கு ஆத்திரம் தணியவில்லை! அதனால், கட்சி செயற்குழு அனைத்திற்கும் சத்தியமூர்த்தி அணி ஆட்களாகவே நிறுத்தி வெற்றியும் பெற்றார்கள்: செயற்குழு முழுவதையும் கைப்பற்றினார்கள் இராஜாஜி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்தாரே தவிர, அக்கட்சியின் செயற்குழு பலம் முழுவதும் சத்தியமூர்த்திக் குழுவிடமே காட்சியளித்தது. இதற்கெல்லாம் காரணம், காமராஜ் அவர்களுக்குக் கட்சித் தொண்டர்களிடம் இருந்த செல்வாக்குதான் என்று ராஜாஜி அணியினர் உணர்ந்து கொண்டார்கள்! காமராஜ் அவர்கள் கட்சித் தேர்தல் களத்தில் முழு மூச்சாக இறங்கிப் பணியாற்றாமல் இருந்தால், கட்சியிலே அன்று சத்தியமூர்த்திக்கு இந்தப் பெரும்பான்மை பலம் ஏற்பட்டிருக்காது! தலைவர் பதவிக்குப் போட்டி ஏற்பட்டது என்னமோ இரண்டு பிராமணர்களுக்கு இடையே எழுந்த ஒரு கட்சி சுயநலப் போட்டி தான் பிராமணர்களுக்குள்ளேயே கட்டுக் கடங்காதது தனி ஒரு பிராமணர்தன்னலம் என்பதும், அன்று உலகுக்குப் புரிந்தது! கட்சித் தேர்தலில் ஒரு பிராமணரின் மானத்தைக் காக்க, பிராமணரல்லாத காமராஜரால் தான் முடிந்ததே தவிர, இரு பிராமணர்களுக்கு இடையே இருந்த கட்சிப் பலத்தால் முடியவில்லை என்பதையும் - அன்றைய அரசியல் உலகம் அலசி ஆய்ந்தது! காமராஜ், அப்போது தான் முதல் முதல் தமிழ் நாடு காங்கிரஸ் கட்சியின் செயற் குழு உறுப்பினரானார்! ஆனால், அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முழுப் பலத்தையும் கைப்பற்றினார். காமராஜ் அவர்கள் திரை மறைவிலே நின்று கொண்டு POPPAT POLTICS -ல் அரசியல் பொம்மைகளை ஆட்டுவிக்கும் சூத்திரக் கயிறாக இருந்தார்: