பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 36 தேசியத் தலைவர் காமராஜர் ஏறிய ஏணியைப்போற்றிக் காத்தவர் இராஜாஜியுடன் மோதுகின்ற கட்சி அரசியல் துரதிருஷ்டத்தை இராஜாஜியே உருவாக்கி விட்டார். பாவம் இரு அணிகள் சார்பாக ஒப்புக் கொண்ட சமாதான முடிவின்படி, அவர் நாணயமாக நடக்க வில்லை! அதனால், இவர்கள் இருவரும் சாகும்வரை அரசியல் எதிரிகளாகவே வாழ்ந்து செத்தார்கள்! இராஜாஜியும் காமராஜூம் எப்போதும் - எங்கே சந்தித்தாலும், பெரியவருக்குரிய மரியாதையைக் காமராஜ் கடைசி வரைக் கொடுத்தார். தமிழ்ப் பண்பாட்டை வளர்த்தார் தான் வளர்ந்த கட்சிக்குரிய உயிருக்கும் - மானத்திற்கும் பங்கமேற்பட்ட போதெல்லாம் - காமராஜர், தனது உழைப்பையே உதிரமாகக் கொடுத்து அறுவைச்சிகிச்சை செய்து கட்சி உயிரைக்காப்பாற்றினார் - அதன் மானம் காத்தார். நேரு உயிரோடிருக்கும் போதே காமராஜ் திட்டம் என்ற கே. பிளான் திட்டத்தைக் கொண்டு வந்து காங்கிரசுக்குப் புது ரத்தம் பாய்ச்சினார். இதனைப் பத்திரிகைகள் எல்லாம் (KAMARA PLAN) காமராஜ் திட்டம் என்றும் (SHOCK_TREATMENT அதிர்ச்சி வைத்தியம் என்றும் அரசியல் உலகம் பெயரிட்டன: நேருவிற்குப் பிறகு யார்? லால்பகதுர்சாஸ்திரிக்குப் பிறகு யார்? என்ற வினாவை உலக நாடுகள் தொடுத்தபோதெல்லாம், தலைவர் காமராஜ் அவர்கள், தான் வளர்த்த காங்கிரஸ் கட்சிக்கும், தன்னை வளர்த்த காங்கிரஸ் கட்சிக்கும் கடுகளவும் துரோகம் செய்யாத தமிழ்ப் பண்பாளராக நின்று சாகும் வரை அதே கட்சியிலேயே தொண்டாற்றினார்: ஆணிவேரறுந்த காங்கிரஸ் நிலை? ஆனால், இராஜாஜி - தன்னை வளர்த்த காங்கிரஸ் கட்சியின் வேரிலே கொதிநீரை ஊற்றித்துரோகம் செய்ததைத் தமிழ் நாடும் - இந்திய பூபாகமும் அறியும்: அரசியலில் செல்வாக்குடன் இராஜாஜி வளர ஏணிப்படியாக இருந்த தமிழ் நாட்டுக்காங்கிரஸ் கட்சியின் ஆணிவேரையே அவர் அறுத்தெறிந்தார் ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டு களாகியும்கூட, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் ஆணி வேர் அறுபட்ட நிலையில், பக்கவேர்களால் கூட அது பலம் பெற முடியாமல்; செடி கொடிகள் மீதேல்லாம் காங்கிரஸ் பற்றிப் படரப்பார்க்கும் பாவத்தை ராஜாஜி உருவாக்கி விட்டுச் செத்தார்: