பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 1 37 என்றைக்கு இரு பிராமணர்கள் பதவிப் போட்டிகளிலே காங்கிரஸ் கட்சியின் மானத்தைச் சூத்திரதாரியாக நின்று காமராஜ் காப்பாற்றினாரோ, அந்த பாவம், வஞ்சம், முதல் அரசியல் வஞ்சம் . காமராஜர் சாகும்வரை படிப்படி வஞ்சமாக வளர்ந்துவிட்ட வரலாறுதான் - காமராஜ் அவர்களைப் பொறுத்தவரை, தமிழகக் காங்கிரஸ் வரலாறாக அமைந்து விட்டது! ஏன்? இந்தியக்காங்கிரஸ் கட்சி சரித்திரமாகவும் மாறியமானபங்கமாக இருக்கிறது. இதற்குச் சான்றிதழ் தேவையில்லை; 1967ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் ஆடிவரும் அரசியல் அல்லோலகல்லோலப் பதவிப் போராட்டமே, தமிழக வரலாற்றுக்குரிய சான்றாகும் எவன் தோள் கிடைக்கும் ஏறலாம் என்ற ஏணியேற்ற ஏக்கங்களே போதும் அல்லவா! கைப்புண்ணுக்குத் தேவையா கண்ணாடி இந்திய அரசியலிலும் அதே நிலை தான் இன்று வரை நீடித்து வருகிறது. என்று மீண்டும் காங்கிரஸ் கட்சி தனது கோட்டை அரியணையைப் பற்றுகின்றதோ, அன்றுதான் - ராஜாஜியின் அரசியல் வஞ்சம் - காமராஜ் வாரிசுகள் காலகட்டத்தால் காப்பாற்றப்பட்டதாகும்; நடக்குமா? காமராஜர் நினைவாலயம் சான்று தருமா? ஆனால், காமராஜரும் மாண்டு விட்டாரே! பார்ப்போம்! இது 2002-ஆம் ஆண்டு இந்தச்சூழ்நிலையில் மீண்டும் 1931-ஆம் ஆண்டுக்கு வருவோம்! காந்தி மெளனமும், நேருதிட்டமும் இப்போது, இலண்டன் மாநகரில் முதல் வட்ட மேஜை மாநாடு நடந்தது காந்திஜி கலந்து கொண்டார் - இந்தியப் பிரதிநிதியாக! அவருடன், கவியரசி சரோஜினி தேவி, வேறு சிலரும் துணையாகச் சென்றார்கள்: அந்த மாநாட்டினால் இந்தியாவிற்கோ அதன் சுதந்திரத்திற்கோ எள்ளளவும் பயனில்லை! ஏமாற்றத்துடன் காந்தியடிகள் 1931 - டிசம்பர் மாதத்தில் திரும்பினார். வட்ட மேஜை மாநாட்டில், அப்போதைய பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மாக்டொனால்டு அடிகளிடம் வாய் இனிக்கப் பேசினார். இறுதியாக, காங்கிரஸ் கட்சி தனது தீய வழிகளை நிறுத்திவிட்டு வட்டமேஜை மாநாட்டுக் குழுவிலே நட்புரிமை யோடு பழகிக் கலந்து கொள்ளவேண்டும் என்ற முடிவோடு அவர்காந்தியடிகளை வழியனுப்பி விட்டார்: