பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 தேசியத் தலைவர் காமராஜர் நைனிடால் சிறையிலே கடும் சோதனைகளுக்கு ஆளான நேரு அவர்கள். பிரிட்டிஷ் படை இந்தியாவை விட்டுப் போய் விட வேண்டும் என்றார்: இந்திய ராணுவம், இந்திய அரசாங்க அதிகாரத்தின் கீழ் இயங்க வேண்டும். பிரிட்டனுக்கும் இந்தியாவிற்கும் இடையே சமரசப் பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்றும் அவர்அறிக்கைவிட்டார்: வட்ட மேஜை மாநாட்டில் கலந்து கொண்ட இந்தியப் பிரதிநிதிகள் வகுப்புவாதிகளாகவும் அல்லது தேசியவாதிகளாக வும் இருந்தாலும், பிரிட்டிஷார் இந்தியாவிலேயே இருக்க வேண்டும் என்றே வாதாடலானார்கள்! காந்தியடிகள் ஒருவர்தான், இந்தியாவிற்கு விடுதலை தேவை என்ற அடிப்படைக்கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைத்து அங்கே வாதாடலானார். அதற்குப் பதிலளித்த பிரதமர் ராம்சே மாக்டொனால்டு மேற்குறிப்பிட்டவாறு வாயினிக்கப் பேசி அடிகளை வழியனுப்பி விட்டார். இந்த முடிவைப் பரிசீலனைபுரியவே, 1931-ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை கராச்சி நகரில் சிறப்பாகக் கூடியது. சர்தார் வல்லபாய் படேல் அதற்கு தலைமை ஏற்றார். அந்த மகாசபை செயற்குழுவின் முடிவைக் கண்ட வைஸ்யராய் வெலிங்டன், மிருகத்தனமான அடக்குமுறைகளைக் காங்கிரஸ்காரர் கள் மீது கையாண்டார் நாடே எரிமலையாக மாறிக் கனற்பிரவா கத்தைக் கக்கியது: துப்பாக்கித் தர்பார் பல இடங்களில் பிணங்கள் பற்பல ஆங்காங்கேதரை பாரமாயின; தடியடித்தாண்டவங்களால் மக்களின் சுதந்திரதாகத்தைத் தணிக்க முடியவில்லை! இதற்கு மேல் எல்லாத் தலைவர்களையும் நாடெங்கும் பரவலாகக் கைது செய்தது வெலிங்டன்தர்பார்: காமராஜ் மீது ஜாமீன் வழக்கு தமிழ் நாட்டில் காமராஜ் அவர்கள் மீது பல வழக்குகள் ஜோடிக்கப்பட்டன. அவைகளில் அவர்மீது துணிகரமாகப் போடப்பட்ட வழக்கு ஜாமீன் வழக்கு காமராஜ், ஜாமீன் ஈடு தொகையைக்கட்டமறுத்தார் வழக்குமன்றம் ஏறினார்; சமதொகை