பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 139 نیمه கட்டமுடியாது என்று கண்டிப்பான குரலில் மறுத்தார் சிறைவாசம் ஒராண்டு என்றார் நீதிபதி திருச்சி ஜெயிலிலே காமராஜ் தள்ளப்பட்டார்: சிறைக் கொடுமைகளை ஏற்ற காமராஜ், தளரவில்லை! அவர், கைதான செய்தியும் - சிறைத் தண்டனையும் காட்டுத் தீபோல மதுரை மாவட்டம் முழுவதும் பரவியது! மதுரையிலும் பிற இடங்களிலும் ஆங்காங்கே உள்ள மக்கள், கடையடைப்புகளைச் செய்து, தங்கள் தலைவரின் மீதுள்ள அன்பையும் . அனுதாபத்தையும் வெளிப்படுத்தினார்கள். தமிழக முழுவதும், காமராஜ் அவர்களுடைய அரசியல் அணியினர், கண்டனக் கூட்டங்களைப் போட்டு ஆங்கில ஆட்சியின் காட்டுமிராண்டித்தனங்களைக் கண்டித்தார்கள்! கண்டன ஊர்வலங்கள், கண்டன துண்டறிக்கைகள், கடையடைப்புகள், எல்லாம் நடைபெற்றன: காவல் நிலையம் மட்டும் காமராஜ் அணியைக் கண்காணித்தவாறே இருந்தது! விருதுநகர்அஞ்சலகத்திலே ஒரு வியப்பூட்டும் செய்தி இரவோடு இரவாக நடந்தது! போலீசாரின் தலைகள் வாங்கப்படும் என்ற பெரிய பெரிய எழுத்துக்களாலான சுவரொட்டி ஒன்று கையால் எழுதி ஒட்டப்பட்டிருந்தது வாங்கப்படும் என்றால், அவர்கள் தலைகள் வெட்டப்படும் என்றே எதிரணியினர் பொருள் புகன்றார்கள். அன்றைய விடியலுக்குப் பின்வந்த எழு ஞாயிற்றொளியில், மக்கள் கும்பல் கும்பலாகத் திரண்டு வந்து படித்துக் கொண்டே சென்றார்கள். ஆனால், அந்தச் சவரொட்டியை எழுதியது யார் மர்மமாகவே தோன்றியது! சரி போகட்டும், அதை ஒட்டியவர் யார்? அதுவும் துப்பறியப்படவேண்டிய மர்மமாகவே நின்றது! போலீசார் அதைக் கண்டு பிடிக்கப் போதிய அக்கறை காட்டவில்லை! ஆனால், வதந்தியைப் பரப்புவதிலே வல்லவர்களான ஜஸ்டிஸ் கட்சித் தொண்டர்கள், காமராஜ் நண்பர்கள் மீதும் பழி போட்டார்கள், காரசாரமான கண்டனக் கூட்டங்களைப் போட்டு பழிசுமத்தினார்கள் காமராஜ் மீது. முருக - தனுஷ்கோடி என்ற காமராஜின் பள்ளி நண்பர் தான் அந்தச் சுவரொட்டியை ஒட்டினார் என்று வழக்கு மட்டுமே தொடரப்பட்டது விருதுநகர் காவல்துறையால்!