பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(ဒွတ္သ வெடிகு திருச்சி சிறையிலே இருந்து, வேலூர் கோட்டைச் சிறைக்கு வந்தார் காமராஜ் அங்கேயும் இந்தியாவெங்கும் போராட்டமாடிய காங்கிரஸ்காரர்கள் பலர் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள் வடநாட்டிலே பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மரண வழக்கிலே சிறைத் தண்டனை பெற்ற சிலரும் வேலூர் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தார்கள்! நால்வர் மரணம்! நாடு கொந்தளிப்பு! அவர்களோடு கைது செய்யப்பட்ட ஜதீந்திரநாத் தாஸ் என்பவர் சிறைக் கைதிகளைச் சித்திரவதை புரியும் வெள்ளையர் சட்டத்தை எதிர்த்துச் சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்து இறந்தார்: இந்த நால்வரின் மரணம், இந்தியா முழுவதும் ஒரு தேச பக்த மனப்புரட்சியை உருவாக்கிக் கொண்டிருந்தது. அந்த வழக்கிலே கைது செய்யப்பட்டு வேலூர் சிறையிலே இருந்த மாவீரன் பகத்சிங் அவர்களின் நண்பர்களான ஜெய்தேவ் கபூர், கமல்நாத் திவாரி ஆகியவர்களைக் காமராஜ் சந்தித்து, பகத்சிங்கின் உண்மை வரலாறு என்ன என்பதைக் கேட்டார். அப்போது அவர்கள் காமராஜிடம் சொன்னவை இவை: "பாஞ்சால சிங்கம் லாலா லஜபதிராய், லாகூர்நகரிலே, சைமனே திரும்பிப் போ என்ற போராட்டத்தை நடத்தினார். இளைய வயதுடைய ஒர் இங்கிலீஷ் துணை ஆய்வாளரான காவல் அதிகாரி, இடையே புகுந்து, லஜபதிராய் மார்பிலே சரமாரியாக குண்டாந்தடியால் தாக்கிக் காயங்களை ஏற்படுத்தினார்' 'இலஜபதிராய் ஒர் இருதய நோயாளி: இருந்தும், நின்று குரலெழுப்பிய இடத்தை விட்டு ஒரடி கூட பின் நோக்கவில்லை - நகரவில்லை. காந்தியடிகளின்அரசியல்தத்துவத்தின்படி பாஞ்சால சிங்கம் லஜபதிராய், அமைதியாக, அகிம்சைக்குக் கட்டுப் பட்டு, அந்த வெள்ளைக்கார இளைஞன் அடித்த அடிகளை எல்லாம் தனது