பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$42 தேசியத் தலைவர் காமராஜர் மார்பிலேதாங்கிக்கொண்டார். அந்த அடிகளைத்தாளாத வயதேறிய அந்தச் சிங்கம் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு மரணமடைந்தது' "பாஞ்சால மக்களின் ஒப்பற்ற தலைவர், நிகரற்ற செல்வாக்குப் படைத்தவர்அவர் இந்தியத் தலைவர்களிலே மிகச்சிறப்பு வாய்ந்த அந்தத் தலைவரை ஏராளமான மக்கள் கூடிய ஒரு பெருங் கூட்டத்திலே வெள்ளைக்கார அதிகாரி ஒருவர் மார்பு மேலேயே தாக்கித் தாக்கிச் சாகடித்து விட்டார் என்றால், இந்தச் சம்பவம் இந்தியாவின்மானத்திற்கு விடப்பட்ட சவால் அல்லவா?" “லாலா லஜபதிராய் தன்னைத் தாக்கியதற்காகக் கூட அவர் வருத்தப்படவில்லை! ஆனால், அந்த சம்பவத்தை, இந்தியா விலுள்ள முப்பது கோடி மக்களுக்கும் நேர்ந்த அவமானமாக எம் போன்ற இளைஞர்கள் கருதியதிலே என்ன தவறு? பாரத தேசத்திற்கு ஏற்பட்ட இந்த அவமானத்தைக் கேள்விப் பட்டதும், இந்தியாவே கொதிப்படைந்ததை யார்தான் குறை கூற முடியும்?' “லாலாவை அடித்து மரணமடையச்செய்த அந்த வெள்ளைக்கார அதிகாரியை, அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றதிலே பாவ : புண்ணியத்தைப் பார்க்க முடியுமா?" 'அதுமட்டுமா? லாலா அடிபட்டுச்செத்ததையும், அந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டதையும் வழக்காக்கி வெள்ளையர் ஆட்சி நடத்தியது! அது, சதி வழக்குச் சாட்டியவர்களிடம் வழக்கு மன்றத்திலே நடந்து கொண்ட மனச்சாட்சியற்ற நியாய விரோதமான செயல்கள் - மக்களுக்குப் பிடிக்க வில்லை!" 'அதனால், வழக்கிலே இணைக்கப்பட்டவர்கள் நீதி மன்றத்திலே உண்ணாவிரதம் இருந்தார்கள்! அந்தச் சம்பவம், நாட்டிலே பெரிய பரபரப்பை உருவாக்கிற்று.” மேலும் அவர்கள் தொடர்ந்து கூறினர்: சட்டமன்றத்தில் வெடிகுண்டு! 'ஒருநாள், தில்லி இந்திய சட்டமன்றத்தின் பார்வையாளர் பக்கத்திலே இருந்து - திடீரென இரண்டு வெடி குண்டுகளைப் பகத்சிங்கும் - பி.கே. தத்தரும் எறிந்தார்கள்!' “வீசப்பட்ட அந்த வெடிகுண்டுகள் வெடித்தவுடன் பெரிய கலவரமும் - குழப்பமும் - பரபரப்பும், திடுக்கிடும் திகைப்பும் அவையிலே இருந்த அனைவரையும் அதிர வைத்து விட்டது. யாரையும் கொல்ல வேண்டுமென, இந்த குண்டுகள்