பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி † 43 விசப்படவில்லை; எந்த ஒரு பரபரப்பும், சேதமேதும் ஏற்படாத நிலையிலேயும்தான், குண்டுகள் எறியப்பட்டன என்று குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தமது வழக்குமன்ற வாக்கு மூலங்களிலே கூறினர். பண்டிதநேரு அவர்கள்தனது சுயசரிதை நூலில் அவர்களைப்பற்றி எழுதியிருப்பதைப் படித்திருப்பீர்களே அவர் எழுதியுள்ளார். அது வருமாறு: 'பகத்சிங்கையும் - ஜதீந்திர நாத்தாசையும் கண்டேன்! பகத்சிங், கவர்ச்சி பொருந்திய, புத்திசாலித்தனமான முகத்தோற்றம் உடையவராகக் காணப்பட்டார் அமைதி தான் அவரது முகத்திலே குடி கொண்டிருந்தது. கோபம் சிறிது கூட அவர் முகத்தில் காணப்படவில்லை. சாந்தமாகவே பேசினார்கள் மிருதுவான கன்னிப் பெண்களைப் போலக் காணப்பட்டார் ஜதீந்திர நாத் தாஸ் அறுபத்தோரு நாட்கள் அவர் உண்ணாவிரதம் இருந்து மாண்டார். (தமிழ்நாடு என்று பெயர்வைக்க உண்ணாவிரதம் இருந்து செத்த மாவீரன் சங்கரலிங்கனாரைப் போல) பகத்சிங் நண்பர்கள் கூறிய இந்த மான வரலாற்றைக் கேட்டுக் காமராஜர் கண்ணிர்த் துளிகளை உகுத்தார். இனிமேல், தன்மீது போடப்படும் எந்த வழக்குகளையும், பகத்சிங் மனதோடேசந்திக்கத் தயாரானார்: அதற்குப் பிறகு பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நண்பர்கள், இந்தியாவின் சிங்கமான 'லாலாவைக் குண்டாந்தடி கொண்டே தாக்கிக் கொன்றுவிட்டானே ஒர்.ஆங்கிலேயன் - அதைக் கேட்க இந்தியாவிலே நாதி இல்லையா? எல்லாருமே சோற்றாலடித்த பிண்டங்களா? இல்லை மரக்கட்டைகளா? என்ற மான வினாவை மற்ற நாடுகள் எழுப்பும்போது, இந்தியாவின் மானம் காற்றில் பறக்குமே என்பதற்காக அந்த மானத்தைக் காக்க அவர்கள்துக்கிலே உயிர் துறந்தார்கள்' என்று, அந்தச் சிறை நண்பர்கள் கூறி முடித்தபோது காமராஜ் ஊமைபோல நின்றார்: விருதுநகர் சதிவழக்கு சோடனை அம் மூவர் செயலைப் பாராட்ட காமராஜரால் முடியவில்லை! காரணம், வெடிகுண்டு வீசுவது காந்தியடிகளுக்கு விரோதமான வன்முறைச் செயலாயிற்றே என்பதால்! லாகூர்சதிவழக்குத் தோழர்களிடம், காமராஜ் சிறையிலேபேசிய முழு விவரம், வேலூர் சிறையதிகாரிகளுக்குத் தெரிந்துவிட்டது