பக்கம்:தேசியத் தலைவர் காமராஜர்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 44 தேசியத் தலைவர் காமராஜர் அதே நேரத்தில் விருதுநகர் அஞ்சலகத்தில் ஒட்டப்பட்ட 'போலீஸ் தலை வாங்கப்படும் என்ற சுவரொட்டி வழக்கு வீரர்களோடு காமராஜ் அளவளாவிய சம்பவமும் வேலூர் சிறையதிகாரிகட்குத் தெரிந்தது! இந்தச் சிறை சந்திப்புகளை அடிப்படையாகக் கொண்டு - 1933-ஆம் ஆண்டு காமராஜ் அவர்கள் மேல் 'சென்னை சதிவழக்கு" என்ற பெயரால் ஒரு வழக்கை வெள்ளையராட்சி தொடர்ந்தது! அந்த வழக்கில் கூறப்பட்ட காரணம் வினோதமாகவும் - விசித்திரமாகவும், விலா நோகச் சிரிப்பூட்டுவதாகவும் இருந்தது! உதகமண்டலம் வருகை தரவிருந்த, வங்க அடக்குமுறையிலே புகழ்பெற்ற ஆளுநர் சர்ஜான் ஆண்டர்சன் என்பவரை, காமராஜர் கே. அருணாசலம் மற்றும் சில காங்கிரஸ்காரர்கள் சேர்ந்து சுட்டுக் கொல்லச்சதி செய்தார்களாம்! அதனால், காமராஜ் அவர்களையும் அந்த வழக்கில் இணைக்கக் காவலர்கள் பெரும் முயற்சி செய்தார்கள்! ஆளுநரைச்சுட்டுக் கொன்றிடக்காமராஜ்தான்சதி செய்தார் இந்த சம்பவத்துக்கு அவர்தான் முக்கிய பொறுப்பு என்றும் வழக்கை ஜோடித்தார்கள் போலீசார்: கே. அருணாசலம் என்பவருக்கு இரண்டு துப்பாக்கிகளைக் காமராஜர்தான் கொடுக்க எல்லா ஏற்பாடுகளையும் செய்தார் என்று காவல்துறை சார்பில் முதல் அறிக்கை ஒன்று தயாரானது! ஆனால், இந்த வழிக்கு போராட்ட வீரர்களைப் பயமுறுத்தியதே தவிர, நீதிமன்றத்தில் நிரூபிக்கப் படாததால் தோற்றுப் போனது.ஆங்கிலேயக் காவல் துறையினரால் தயாரிக்கப்பட்ட அந்தப் பொய் வழக்கு வெற்றி பெறாமல் போகவே, மீண்டும் அதே காவல் துறைக்குக் காமராஜ் மேல் கட்டுக்கடங்கா ஆத்திரமும் - ஆணவமும் பொங்கி எழுந்தன! விருதுநகர் வெடிகுண்டு வழக்கு சோடனை வேறொரு வழக்கைக் காமராஜ் மீது தயாரிக்க ஆரம்பித்தார்கள்! 'பூர்வில்லிபுத்துர் - விருதுநகர் காவல் நிலையம் வெடிகுண்டு வழக்கு என்று அந்த வழக்குக்குப் பெயரிடப்பட்டது. இந்த வழக்கில் புதுமாப்பிள்ளையான கே.எஸ்.முத்துசாமி முதல் எதிரி! இரண்டாவது எதிரி காமராஜ் அவர்கள் நிருபர் மாரியப்பன் என்பவர் மூன்றாவது எதிரி நாராயணசாமி என்பவர் நான்காவது எதிரி அதில், வெங்கடாசலம் என்பவர், அப்ரூவராக மாறினார்: